Friday 8 April 2011

பேராசிரியரின் சமீபத்திய உரை

கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்குங்கள்.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ராமநாதபுரம் பெருமாள் கோயில் மைதானத்தில் 31.04.2011 அன்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது: நாட்டில், நமக்கு எதிரான சக்தி அன்று முதல் இன்று வரை இருக்கிறது. அப்போதுள்ள கட்சி நேரடியாக மோதியது. ஆனால், இப்போதுள்ள கட்சி வஞ்சகமாக மோதுகிறது. ஜெயலலிதா தமிழுக்கு செய்த தொண்டு என்ன? அவரோடு கூட்டு சேர்ந்துள்ள நடிகர் விஜயகாந்த் செய்த சாதனை என்ன? 5 ஆண்டுகளாக அவர்களுடன் இருந்த வைகோவை தூக்கி வீசி விட்டார்கள். நாங்கள் யாரையும் அலட்சியப்படுத்த மாட்டோம்.
பாம்பு, கீரியை வைத்து கிராமத்தில் வித்தை காட்டுவார்கள். அதுபோல், தேர்தல் கமிஷன் செயல் படுகிறது. ஓட்டுபெட்டியை பாதுகாக்க ஒரு மாதம் செலவிடுகிறார்கள். மக்கள் பணத்தை வீணாக செலவு செய்கிறார்கள்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,450 கோடி இழப்பு ஏற்படுகிறது என முதல்வரிடம் தெரிவித்தேன். அடித்தட்டு மக்கள் பயன்பெறுவதால் இந்த இழப்பை தாங்குவோம் என்றார் கருணாநிதி.
விவசாயிகள் வேதனையை தீர்க்க ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்ததால் தமிழ்நாட்டில் தற்கொலை சாவு தடுக்கப்பட்டுள்ளது. தொழில் வளத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரமாக இருந்தது தற்போது ரூ.65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உள்ளாட்சிதுறையில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்தான்.
தமிழகம் முழுவதும் புது எழுச்சி உருவாகியுள்ளது. மக்கள் நலனை நாடும் நல்லாட்சி தொடர திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்குங்கள்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
.........

ஜெயலலிதா, விஜயகாந்தை பார்த்து மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் காங்கிரஸ் வேட்பாளர் தண்டபாணி அறிமுக கூட்டம் நடந்தது. அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை வகித்தார். முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் வரவேற்றார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது: இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் நடக¢கின்ற தேர்தல். வைகோ திமுகவை விட்டு போனார். அவரை ஜெயலலிதா சிறையில் அடைத்தார். ஆனால் கருணாநிதி நம்மை எதிர்த்தவர் என்று நினைக்காமல் சிறையில் சென்று அவரை பார்த்தார். வைகோ சிறையில் இருந்து வந்தவுடன் 6மாதத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். நாடெல்லாம் சுற்றி வெற்றியை தேடித்தந்தவர் வைகோ என்று ஜெயலலிதாவே பாராட்டினார். ஆனால் அவருக்கு அதிமுகவில் 8இடம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் வைகோ ஏமாந்து வெளியேறி தேர்தலை புறக¢கணிக¢க போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் நிற்க முடியவில்லையே என்று மதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். வைகோ திமுகவை விட்டு வெளியேறியதற்கு காரணம் நாம் திமுகவிற்கு தலைவராக முடியவில்லையே என்பது தான். தலைவர் பதவி முதல்வருக்கு மட்டும் தான். அதற்கு காரணம் அவர் செய்யும் மக¢கள் தொண்டு.
கட்சி ஆரம்பித்த சில நாட்களில் நான்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு நடிகர் கூறினார். நான் கருப்பு எம் ஜிஆர் என்றும் கூறு கிறார். கடவுளோடு கூட் டணி என்று கூறியவர் இன் றைக¢கு ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்துள்ளார். நடிகர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின் போது வேட் பாளர் ஒருவரை அடித் தார்.
எதற்காக அடித்தார் என்று விசாரித்த போது பெயரை தவறுதலாக கூறிவிட்டதால் அடித்தார் என்றார்கள். அவரை அக¢கட்சியினர் கேப்டன் என்று கூறுவார்களாம். இதற்கு நடிகர் வடிவேல் தண்ணீரில் ஓடும் கப்பலுக¢கு கேப்டனா அல்லது தரையில் ஓடும் கப்பலுக¢கு கேப்டனா என்று கேட்டுள்ளார்.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரை பார்த்து மக¢கள் ஏமாந்து விட மாட்டார்கள்.
கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள் ளன. குறிப்பாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மக¢களிடம் ளீ150கோடி பணப்புழக¢கம் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் நல்ஆட்சி நடப்பது தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஊராட்சிக¢குழு தலைவர் கவிதா பார்த்திபன், திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரியம் எஸ்.நட ராஜன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், எரியோடு பேரூ ராட்சி தலைவர் மஞ்சுளா, நகர செயலாளர்கள் எரியோடு ஜீவா, வேடசந்தூர் அன்வர்அலி, வடமதுரை ஒன்றிய செயலாளர் ராயல் என்ற சின்னான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

........
ஒரு ரூபாய் அரிசியால் தமிழகத்தில் பட்டினி சாவு இல்லை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து, புங்கம்பாடி கார்னரில் நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் பல்வேறு வகையில் வழிகாட்டியாக உள்ளது. பல்வேறு சாதனைகளுக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக உள்ளனர். இந்த அரசு சிறுபான்மை மக்களை மதிப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பாகவும் உள்ளது. முதல்வர் அமைத்துள்ள கூட்டணி பலமான கூட்டணி. வறுமையில் உள்ள ஏழைகளுக்கு கிலோ ஒரு ரூபாய் அரிசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால்தான் மற்ற மாநிலங்களில் உள்ளது போல பஞ்சம், பசியால் தமிழகத்தில் தற்கொலை இல்லை. முன்பெல்லாம் இரவு பிச்சை என்று பல பேர் வருவார்கள். ஆனால், இன்று இரவு பிச்சை என்பதே இல்லை. விவசாயிகள் வேதனை தீரும் வகையில் ஸீ7,000 கோடிக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் உணவு பஞ்சம் வராது.
நஞ்சை, புஞ்சை நிலங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டம் ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சிக்கு சான்றாக, சிறப்பான நிர்வாகம், உள்ளாட்சியில் சிறப்பான வளர்ச்சி, நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், கல்வி வளர்ச்சி என தமிழகத்துக்கு 4 விருது கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அதிக பாலங்கள், சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு தவறி விடும். நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.

..............

முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே வழிகட்டி.

தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜாவை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த எஸ்.பி. பகவன்தாஸ் ரெட்டியார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஆ. ஜானகிராமன் வரவேற்றார். கூட்டத்தில் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் பேசியதாவது: தாம்பரம் தொகுதி படுவேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல¢ மேம்பாலங்கள், சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் ராஜா, பத்து ஆண்டுகளாக தாம்பரம் நகராட்சி தலைவராக இருந்தார். அப்போது குடிநீர், சாலை வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, பல திட்டங்களை தாம்பரம் தொகுதிக்கு கொண்டு வந்துள்ளார். உள்ளாட்சி பொறுப்பில் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் இருந்ததன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக நடந்துள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் முதல்வர் கருணாநிதி அலை வீசுகிறது. காரணம், கடந்த 5 ஆண்டு கால நலத்திட்டங்கள். முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே வழிகட்டி. இந்தியா நெருக்கடி நிலையில் இருந்தபோது அந்த நிலையை மாற்றியதில் முக்கிய பங்கு கருணாநிதிக்கு உண்டு.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினோம். தற்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். வெளியிலிருந்து வந்தவர்களை நம்ப வேண்டாம். இங்கு உள்ளவர்களை நம்புங்கள்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
முடிவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆதிமாறன் நன்றி கூறினார்.
முன்னதாக தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள தொகுதி வேட்பாளர் அலுவலகத்தை அன்பழகன் திறந்து வைத்தார்.

..............

மக்களை மதிக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் நிதியமைச்சர் க.அன்பழகன் 24.03.2011 அன்று திருமங்கலத்தில் உள்ள சத்தியசாய் நகர், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, தில்லையாடி வள்ளியம்மை நகர், என்.வி.நடராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன், வில்லிவாக்கம் பகுதி செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அன்பழகன் பேசுகையில், ”இந்த தேர்தல் தீய சக்திகளுக்கு எதிராக நடைபெறும் தேர்தல். திமுக அரசு ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து அதை காப்பாற்றி வருகிறது. தொழிலாளர், அரசு ஊழியர், காவலர்கள் ஆகியோரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அரசு. மக்களை மதிக்காத, மக்களை ஏமாற்றுபவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. ஏழைகள் வாழ, முற்போக்கு பணிகள் தொடர நடைபெறும் நல்லாட்சி நீடிக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.

.........
அண்ணா எதை விரும்பினாரோ அதை தி.மு.க.அரசு நிறைவேற்றி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கடம்பத்தூரில் ரூ.11/2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,
கலைஞர் ஆட்சியில் ஏராளமான அரசு கட்டிடங்கள் பிரம்மாண்டமான அளவில் தமிழ் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடம்பத்தூரில் ரூ.11/2 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு போதிய அதிகாரம் இல்லை. தற்போது மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டு வந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் போக்குவரத்து, குடிநீர், மின்விளக்குகள், சுகாதாரம், பள்ளிக்கூடங்கள் வசதி என ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த வைரம் பாராட்டு விழாவில் இந்தியாவில் உள்ள சிறந்த மாநிலத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட 8 விருதுகளில் தமிழ்நாடு 4 விருதுகள் பெற்று சாதனை படைத்தது. பிரதமர் மன்மோகன்சிங்கே தமிழ்நாட்டை பாராட்டி பேசியுள்ளார். அண்ணா எதை விரும்பினாரோ அதை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் கான்கிரீட் வீடு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை அனைத்து கிராமப்பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

No comments:

Post a Comment