Friday 8 April 2011

கொரிய மொழியும் - தமிழும் பின்னிப் பிணைந்தவை கொரிய மொழி கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் உரை

சென்னை, ஆக. 13_ சென்னை ஆசியா நிறு-வனத்தின் சார்பில் நடத்-தப்படும் கொரிய மொழி இலக்கியக் கருத்தரங்-கினை 12.8.2009 அன்று தமிழக அரசு கண்காட்-சிப் பேரரங்கில் துவக்கி வைத்து நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:
உலகச் செம்மொழி-களுள் ஒன்றான தமிழ் மொழியின் வேர்களும், விழுதுகளும் பாரெங்கும் வழங்கும் மொழிகள் பல-வற்றிலும் பரந்து படர்ந்து உள்ளன. கிரேக்கம், எபி-ரேயம், அராமைக், ஏலா-மைட், அராபிக், பர்சியன் போன்ற ஏராளமான ஆசிய மொழிகளில் வர-லாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஏற்பட்டுள்ள தமிழின் தாக்கம் பற்றி தொடக்க நிலையில் ஆய்ந்து கண்ட ஆய்வாளர்-களின் ஆய்வு முடிவுகள் வெறும் கருதுகோள்களா-கவே கருதப்பட்டு வந்தன. தற்போது அவையனைத்-தும் உண்மை என்பது தகுந்த சான்றுகளோடு நிறுவப்படும் நிலை அரும்பி வருகிறது.
ஆசியாவில் நிறுவனத்-தின் இயக்குநர் டாக்டர் ஜி.ஜான் சாமுவேல் இயற்-றியுள்ள செம்மொழி-களின் வரிசையில் தமிழ் என்னும் ஏட்டில் எடுத்-துக் காட்டி வரைந்துள்ள உண்மை இது.
ஆரியர்கள் இந்தியா-விற்கு வருவதற்கு முன்-னரே தமிழர்கள் இங்கு இருந்தனர் என்பது தெளிவு. திராவிட மொழி பேசுவோர், சீன திபெத்-திய மொழி பேசுவோர், ஆஸ்ட்ரிக் மொழி பேசு-வோர் ஆகியோர் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்-தியாவில் வாழ்ந்த போதி-லும், இன்றைய இந்தியப் பண்பாட்டில் நூறில் 50 பங்குக்கு மேல் திராவிடர்-களுடையதே என்கிறார் பன்மொழி அறிஞரும் சிறந்த ஆராய்ச்சி வல்லுந-ரு-மான எஸ்.கே.சட்டர்ஜி அவர்கள்.
திராவிடத்தின் தொன்-மைக்குச் சான்றாக உள்ள தமிழ்மொழி_ - இன்றள-வும் அதன் அடிப்படைக் கூறுகளை - சிறப்புகளை இழக்காமல் தொடர்வ-தும், பேச்சு வழக்கில் நில-வுவதும் அதன் பெருமைக்-கும் மேன்மைக்கும் சான்-றாகும்.
தமிழ் மொழி செந்-தமிழ் என்று அழைக்கப் படுவதில் இருந்தே - அது ஒரு செம்மொழித் தகுதி உள்ளதாக வளர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்ப் புலவர்கள் ஆர்வம் கொண்-டிருந்ததை எடுத்துக் காட்-டும். இதனை விவரிக்கும் டாக்டர் சாமுவேல் எடுத்-துக் காட்டுவது இது.
பண்பாட்டுக் கலப்பு-கள் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தங்களும் வாய்ப்-புகளும் ஏற்பட்ட போது, தமது பண்பாடு தனித்-தன்மை வாய்ந்தது என்-பதை மனத்திற் கொண்டே தமிழ்ப் புலவர்கள் செயல்-பட்டு வருகின்றனர்.
தமிழ் மொழியிலான சீரிய ஒலியமைப்பு, சொல்-லமைப்பு, தொடரமைப்பு ஆகியன செவ்வியல் தன்-மைக்குத் தக்க எடுத்துக் காட்டாக அமைகின்றன. அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டுள்ள இத்-தகைய இலக்கண வரை-முறைகள் இன்றைய மொழியியல் வல்லுநர்-களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. மிகப் பழைய காலத்திலேயே இது செவ்வியல் நிலை-யினை அடைந்து, திரா-விட நாகரிகத்தின் உயர்-தனிச் சிறப்பை உலகிற்-குக் காட்டும் சான்றாக நிலை பெற்றுவிட்டதா-கக் கில்பர்ட் சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்-பிடுகின்றார். அவர் கருத்-துப்படி கிரேக்கர்களோடு தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே, தமிழ் மொழி இத்தகைய செவ்வியல் நிலையினை அடைந்திருக்க வேண்டும்.
சங்க இலக்கியத்தில் வடவர் பண்பாட்டின் தாக்கம் கூடப் பெரும்-பாலும் பிராகிருத மொழி வழியாகவே ஏற்பட்டுள்-ளது. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழைய கல்-வெட்டுகளிலும் பிராகிரு-தமே காணப்படுவது இக்-கருத்தை உறுதி செய்கின்-றது. தமிழ் இலக்கியம் முழு வளர்ச்சி அடைந்த-பின்னரே சமஸ்கிருதத்-தின் தாக்கம் தமிழ் இலக்-கியத்தில் நேரிடையாக ஏற்பட்டிருக்கவேண்டும் என்கிறார் பிலியோசா. தமிழ் இலக்கியம் முழு வளர்ச்சி பெற்ற பின்ன-ரும் சமஸ்கிருதச் சொற்-களைக் கடன் வாங்குவ-தில் பழந்தமிழ்ப் புலவர்-கள் தயக்கம் காட்டியே வந்துள்ளனர் என அறிகி-றோம். வடமொழிச் சொற்-களைக் கடன் வாங்-கும் நிலை ஏற்பட்ட-போது தமிழ் மொழி ஒலியமைப்பிலிருந்து மாறு-படும் சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து, தமிழ் மொழியின் ஒலிய-மைப்போடு ஓரளவு இணைந்து செல்லும் பிராகிருத, பாலி மொழிச் சொற்களையே பழந்-தமிழ்ப் புலவர்கள் கட-னாகப் பெற்றுள்ளதைக் காண்கின்றோம். இத்த-கைய நிலையினைத் தமிழ்ப் புலவர்களால் படைக்கப்பட்ட பவுத்த, சமண சமயக் காப்பியங்-களில் அதிகமாகக் காண-முடிகிறது.
தமிழ் இலக்கணத்தில் - சமஸ்கிரும் வடமொழி என்று வழங்கப்பட்டதன் மூலம் தென்மொழி தமிழ் - என்னும் கருத்து நிலவியதை அறியலாம். வடபுலத்தில் செல்வாக்கு பெற்ற மொழி வடமொழி என்று கருதினரேயன்றி, தமிழினை விட உயர்ந்த மொழி என்றோ - தேவ-பாஷை என்றோ, இறை-வன் வழிபாட்டுக்குரிய மொழி என்றோ -_ தமிழ் மொழிவாணர்கள் ஏற்கவில்லை என்பதைத் தெளியலாம். இதனை விளக்கி டாக்டர் சாமு-வேல் கூறுவது இது:
பிற திராவிட மொழி-கள் பிற்காலத்தில் வட மொழியின் தாக்கத்தை வரவேற்ற போதிலும் அதனை மிகவும் தவிர்த்-துள்ள மொழி தமிழே என்பது வெளிப்படை. வடசொற்களைக் கடன் வாங்கும் நிலை ஏற்பட்-டால் கூட அவற்றைத் தமிழின் ஒலியமைப்பிற்கு ஏற்ப மொழியாக்கம் செய்துதான் பயன்படுத்த வேண்டுமென்று தொல்-காப்பியம் வரையறை செய்வதைக் காண்கின்-றோம். வட சொற்கிளவி வடஎழுத்தொரீஇ, எழுத்-தோடு புணர்ந்த சொல்-லாகுமே என்பது தொல்-காப்பியத் தமிழ் நெறி. சங்க இலக்கியங்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் வடமொ-ழித் தாக்கமின்றியே தமிழ் மொழி இயங்கு-கின்றது. வடவர்களின் மொழி, பண்பாடு, இலக்-கி-யம் ஆகியன தம் மொழி, பண்பாடு, இலக்-கியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவை என்ப-தைத் தெள்ளத் தெளி-வாக உணர்ந்து தமிழ் அறிஞர்கள் தம் பண்-பாட்டின் உயர்வு பற்றிய ஒருவிதப் பெருமித உணர்-வுடன் தொடக்கக் காலத்-தில் இருந்தே தமிழ் இலக்கிய இலக்கண மர-புகளை செவ்வியல் நிலைக்-குத் தரப்படுத்தும் முயற்சியால் ஈடுபட்டி-ருந்தனர். தமது பண்பாட்-டுக் கூறுகளை வடவர்-களின் பண்பாட்டு மரபு-களோடு ஒப்பிட்டு வேறு-படுத்திக் காட்டித் தமிழ்ப் பண்பாட்டின் தனித் தன்-மைகளை நிறுவுவதில் பழந்தமிழ் அறிஞர்கள் அதிக ஆர்வம் காட்டி-னர்.
நடு ஆசிய மொழிகள், உரல் அல்டாயிக் மொழி-கள் ஆகியன தமிழோடு உறவு கொண்ட மொழி-கள் என்பதை டாக்டர் கால்டுவெல் 1856 இல் வெளிவந்த அவரது ஆய்வு ஏட்டில் தெளிவாகக் கூறிச் சென்றார். உரல் அல்டாயிக் மொழிக் குடும்பத்தில் கொரிய மொழி, ஜப்பானிய மொழி, ஹங்கேரிய மொழி, சீன மொழி ஆகியன தலை-மை-யிடத்தைப் பெறுகின்-றன. தமிழ் - ஜப்பானிய உறவு பற்றி மிகப் பெரிய ஆய்வுகள் ஜப்பானிய மொழி நூல் அறிஞர் டாக்டர் சுசுமோ ஓனோ போன்ற பெருமக்களால் தமிழறிஞர்களின் துணை-யோடு சிறப்பாக மேற்-கொள்ளப்பட்டு வரு-கின்றன. இந்த ஆய்வுகள் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்ததன் விளை-வாகப் பல அரிய கண்டு-பிடிப்புகள் கிடைத்துள்-ளன. தமிழ் நாட்டுப் பொங்கல் திருவிழாவுக்-கும், ஜப்பானிய நாட்டு அறுவடைத் திருநாளான கோசுட்சுக்கும் இடையே-யுள்ள உறவும், ஒற்றுமை-யும் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. கோனோ போன்ற ஜப்-பானிய இளம் அறிஞர்-கள் ஆசியவியல் நிறுவ-னத்-தில் இவைபோன்ற ஆய்வில் இப்போது தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டிற்-குரியது.
அல்டாயிக் குடும்ப மொழிகளுள் ஒன்றான கொரிய மொழிக்கும், தமிழுக்கும் இடையே-யுள்ள உறவு அழுத்த-மான வரலாற்றுப் பின்-னணிகளைக் கொண்டுள்-ளது. இந்திய நாட்டுப் பெண் ஒருத்தி கொரிய நாடு சென்று, கொரிய நாட்டு இளைஞனை மணந்து கொரியப் பேர-ரசைத் தோற்றுவித்ததாக ஒரு வழிவழி மரபுச் செய்தி உள்ளது. இந்தப் பெண் அயுத் என்ற இந்-திய நாட்டுப் பகுதியி-லிருந்த சென்றதாகப் பழைய கொரிய ஆவணங்-கள் குறிப்பிடுவதால், இது பழங்கால அயோத்தியா-கத்தான் இருக்க வேண்-டும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் கொரிய நாட்டு மக்களால் தம் நாட்டின் முதல் அரசிக்கு நினைவிடமும் கட்டப்-பட்டுள்ளது. அயுத் என்பது தமிழ்நாட்டுப் பகுதியாகத்தான் இருக்க முடியும் என்று கருது-கோளில் பல ஆய்வுகள் தற்-போது நடந்து வரு-கின்றன.
கொரிய - தமிழ் உறவு பற்றிய கால்டுவெல்லின் கருத்தைத் தொடர்ந்து பல அறிஞர்களும் இவ்-விரு மொழிகளுக்கிடை-யேயுள்ள தொடர்பு பற்றி ஆய்ந்துள்ளனர். கொரிய மன்னர் அவையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய ஹீயுபர்ட் (Hubert) என்ற அமெரிக்-கர் திராவிட மொழிக-ளுக்கும் கொரிய மொழிக்-கும் இடையேயுள்ள உறவு பற்றி ஓர் அருமை-யான சிறு நூல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் படைத்துள்ளார். தமிழ்ப் புலமை மிக்க கொரிய அறி-ஞர்களை நாம் உரு-வாக்கத் தவறி விட்டதா-லும், கொரிய நாட்டு அறிஞர்களோடு இணைந்து தமிழ் கொரிய மொழி ஒப்பாய்வில் (Comparative philosophy) நாம் ஈடுபடாததாலும் இத்துறையில் குறிப்பிடத்-தக்க நல்ல ஆய்வுகள் தோன்றவில்லை. எனி-னும் கனடா நாட்டில் தமிழ்ச் சங்கம் ஒன்றினை நிறுவி கொரிய - தமிழ் உறவு பற்றி முழுநிலை-யில் ஆய்வு செய்யும், கொரிய நாட்டுத் தமி-ழறிஞர் பேராசிரியர் ஜம் நம் கிம் இத்துறையில் ஆற்றியுள்ள ஆய்வுப் பங்களிப்பு குறிப்பிடத்-தக்கது. ஆசியவியல் நிறு-வனம் நடத்திய தமிழ்ச் செம்மொழி பற்றிய பன்-னாட்டுக் கருத்தரங்கில் இப்பொருண்மை குறித்து நல்ல பல ஆய்வுரைகளை பேராசிரியர் ஜம் நம் கிம் தந்துள்ளார்.
இப்போது தென்-கொரிய அரசு நிறுவன-மான கொரிய அறக்கட்-டளை (ரிஷீக்ஷீமீணீ திஷீஸீபீணீவீஷீஸீ) ஆசியவியல் நிறுவனத்-தோடு இணைந்து இத்-தகைய அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது வரவேற்-கத்தக்கது. 2007 ஆம் ஆண்டில் கொரிய பண்-பாட்டுக் கலை _ பாரம்-பரியம் பற்றிய கருத்தரங்-கினை இவ்விரு நிறுவ-னங்-களும் இணைந்து சென்-னையில் நடத்தின. இது இந்திய நாட்டில் இப்-பொருண்மை குறித்து நடத்தப்பட்ட முதல் பயிலரங்காகும். இதன் தொடர்ச்சியாக கொரிய மொழி- இலக்கியம் பற்-றிய அடுத்த பயிலரங்கங்-களினை இப்போது நடத்-துவது மகிழ்ச்சி தருகின்-றது.
சென்னையில் 100_க்-கும் மேற்பட்ட பெரிய, சிறிய கொரியத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல கொரிய நாட்டுக் குடும்-பங்களும் இங்கு வாழ்கின்றன. கொரியா என்றால் மின்னணுப் பொருள்கள் (Electronics) மற்றும் கார் உற்பத்தி என்று மட்டும் நினைத்-துக் கொண்டிருந்த தமி-ழர்களுக்குக் கொரிய மொழியின் நீண்ட நெடும் வரலாற்றுப் பின்னணி யினையும் அத்தகைய வர-லாற்றுப் பின்னணியு-டைய கொரிய மொழியு-டன் தமிழ் மொழி பின்-னிப் பிணைந்துள்ள நிலையினையும் கொரியப் பண்பாட்டுப் பெருமை-யினையும், கலைத்துறை-யில் அந்நாடு ஏற்படுத்தி-யுள்ள சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும், கொரிய தமிழ் இந்தியா உறவும், கொரிய தமிழ்-நாட்டுத் தொடர்பில் உருவாகும் நட்புறவும் பெருகி வளரவும் இவை-போன்ற பயிலரங்குகள் துணை புரியும் என்பதில் அய்யமில்லை. தமிழ் மொழி பண்பாடு, இலக்-கியம் ஆகியவற்றைக் கொரிய மொழி பண்பாடு, இலக்கியம் ஆகியவற்-றோடு ஒப்பிட்டு நிகழ்த்-தப்-படும் பல நல்ல ஆய்-வுகள் மலரவும் இந்தப் பயிலரங்கம் வலுவான அடித்தளம் அமைக்கும் என உறுதிபட நம்புகி-றேன்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள தமிழகத்து அறிஞர்-களையும், கொரிய மொழி ஆய்வு அறிஞர் பெருமக்-களையும் அன்புடன் வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் உரையாற்-றினார்.

நன்றி-விடுதலை

பெரியார் உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும்

சென்னை, செப்.10- பெரியார் ஏற்படுத்திய உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் என்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார்.
சென்னை-பெரியார் திடலில் 7.9.2010 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:
வீரமணி அவர்களுக்கு நன்றி
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கக் கூடிய பெருமை எனக்கு வழங்கப் பட்டிருப்பதாக என்னுடைய அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய, வீரமணி அவர்களுக்கு என் னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இது ஒரு பெரிய வாய்ப்பு ஒரு சிறப்பு- ஒரு பெருமை என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலே நான் குறிப்பிடுவதாக இருந்தால் ஒரு முக்கியமான நாள் என்று நான் கருதுகின்றேன் (கைதட்டல்).
நிலைகுலைந்த திராவிடத்தை...
நிலைகுலைந்து போயிருந்த திராவிடத்தை தாழ்ந்த தமிழகத்தை, வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சிபெறச் செய்வதற்காக நடைபெற்ற வரலாற்றின் தொடர்ச்சியாக; மேலும் அதை வலுப்படுத்துவதற்காக, விரிவு படுத்துவதற்காக வளர்ச்சியுறச் செய்வதற்காக, இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில், அவரைப் புரவலராகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
வீரமணி அவர்கள் ஆற்றுகின்ற பணி ஒருவகையிலே சொல்லப்போனால் வீரமணி அவர்கள் ஆற்றுகிற பணி மிக ஆழமான பணி. அழுத்தமான கொள்கையில் ஊன்றியிருக்கின்ற அத்தகைய பணி அனைவருடைய உள்ளத்திலேயும் கட்டாயம் இடம் பெற வேண்டிய பணி.
அப்படிப்பட்ட பணியை இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் மூலமாக பல பேராசிரியர்களின் மூலமாக நிச்சயமாக பெரிய அளவிலே வரும். அது வளரும். ஒளிபெறக்கூடிய அளவிலே வருவோம்
எந்தெந்த வகையிலே நாம் மறைக்கப் பட்டோமோ அந்த வகைகளில் எல்லாம் ஒளி பெறக்கூடிய அளவிலே நாம் வருவோம் என்ற நம்பிக்கையை நாம் பெறுவோம்.
இங்கே தலைமையுரையாற்றியிருக்கின்ற பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் ஒரு நூலைப் படித்து, அந்தக் கருத்துகளிலே உள்ள குறை பாடுகளை குறித்து ஆதங்கத்தோடு கருத்துகளை வெளியிட்டார். இதுதான்-தமிழன் வரலாறே. இப்படி எழுதப்பட்ட நூல்களும், இயற்றப்பட்ட காவியங்களும், மக்களுக்குத் தரப்பட்ட செய்தி களும் நம்மை வீழ்த்துவதாக இருக்கின்றன என்று ஆராய்வதுதான் தமிழனுடைய வரலாறாக நீண்ட நெடுங்காலமாக ஆகியிருக்கிறது.
ஆய்வு மய்யத் தலைவராக ராமசாமி
அந்த முறையிலே ராமசாமி அவர்கள் ஏற்கெனவே திராவிடர் இயக்க வரலாற்றை, தி.மு.க வரலாற்றை, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதியவர் என்ற முறையில் அதுவும் ஆங்கிலத்தில் திறம்பட எழுதியவர் என்ற முறையில் அவர் இந்தத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு தலைவராக இருப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. நான் பாராட்டுகிறேன் (கைதட்டல்).
உண்மையாகவே நாம் தமிழர் என்று சொல்லும் பொழுது கிடைக்காத உரிமையும், பெருமையும்- திராவிடர் என்ற சொல்லுகிறபொழுது கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது (கைதட்டல்).
ஒரு காலத்திலே தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தபொழுது, பெரியாரும் அறிஞர் அண்ணா அவர்களுமாக சேர்ந்து அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் எல்லாம் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.
எதற்காக தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்ற பெயர் இருந்தால் போதாதா? அப்படியும் சில நண்பர்கள் சொல்லுகிறார்களே என்று கேட் பார்கள்.
நான் சொன்ன விளக்கம்
நான் அவர்களுக்கெல்லாம் சொன்ன ஒரு விளக்கம்-பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன்; பார்ப்பனரை விலக்கிய பெயர் திராவிடன் (கைதட்டல்).
பார்ப்பனரை விலக்குவதற்காகவே தொடங்கப் பட்ட இயக்கம்தான் நீதிக்கட்சி, பார்ப்பனர் களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். ஆக இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம் அதை அரசியல் துறையிலே நிலைநாட்டுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
எனவே அந்த அடிப்படையிலே தமிழர் என்பதால் பெருமைப்படுகிறேன். திராவிடர் என்பதால் உரிமை பெறுகிறேன் என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன். ( கைதட்டல்). இன்னும் சிலர் சைவ சார்புள்ளவர்களிடமெல்லாம் நான் அன்போடு பழகக்கூடிய வாய்ப்பு பெற்றிருக் கின்ற காரணத்தால், எதற்கு இந்த திராவிடர்? ஆதிதிராவிடரோடு உங்களை சேர்த்துவைத்துக் கொள்வதிலே என்ன பெருமை உங்களுக்கு? என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு மேடையிலே சொன்ன பதில்: ஆதிதிராவிடன்தான் இந்த நாட்டின் முதல் குடிமகன். அவனோடு சேர்ந்தால்தான் எங்களுடைய உரிமையும் பாதுகாக்கப்படும் என்று சொன்னேன். மனிதத் தன்மையைக் காப்பாற்ற அதுதான் வழி; தீண்டாமையை ஒழிக்க அதுதான் வழி; வரலாற்று மறுமலர்ச்சிக்கு அதுதான் வழி என்று அன்றைக்குச் சொன்னேன்.
பெரியார் ஏற்படுத்திய உணர்வு
உள்ளபடியே இந்த மய்யம் இன்றைக்குத் தொடங்கப்படுகிறது என்று சொன்னால்-தந்தை பெரியார் ஏற்படுத்திய உணர்வு நீண்ட நெடுங் காலம் நிலைப்பதற்கு வாய்ப்பாக இந்த மய்யம் உருவாகியிருக்கிறது.
குறிப்பாக திராவிடம் என்பது மறைக்கப் பட்டது மட்டுமல்ல; ஏறத்தாழ அழிக்கப்பட்டது. அந்த அழிக்கப்பட்ட திராவிடத்திற்கு உயிர் கொடுக்கக் கூடிய நிலைமை சூழ்நிலையின் அடிப்படையிலே நமக்கு ஏற்பட்டது. வரலாற்றில் எப்படி அமைந்தது என்று கேட்டால், வெள்ளையர்கள் வருவதற்கு முன்னாலே, ஆங்கில ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னாலே இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்தது படித்த கூட்டத்தினரின் செல்வாக்கு என்ற பெயரால், வடமொழி அறிந்தவர்களின் செல்வாக்கு அதன் மூலமாக பார்ப்பனியத்திற்கு வந்தது.
வடமொழி அறிந்தவர்கள் பார்ப்பனரல்லாத வர்களாக இருந்தாலும் பார்ப்பனியத்தின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். அதிலிருந்து விடுபட முடியாது.
வெளிநாட்டுக்காரன் பார்த்தது-வடமொழி
எனவே அந்த முறையிலே வடமொழிக்கு அகிலஇந்திய அளவிலே ஒரு செல்வாக்கு இன்னும் சொல்லப்போனால் இந்தியாவைப் பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் முதன்முதலாக ஜெர்மன் நாட்டு அறிஞனோ அல்லது இங்கிலாந்து நாட்டு அறிஞனோ இந்தியாவுக்கு வந்து பார்த்தபொழுது அவர்களுக்குக் கிடைத்த ஏடுகள் எல்லாம் வடமொழி ஏடுகள். வடமொழி தமிழைப் பார்த்து எழுத்துகளை உருவாக்கிக்கொண்டது. வட மொழி கி.பி.3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் தான் நூல் வடிவிலே வந்தது, எழுத்து வடிவிலே வந்தது என்று அறிஞர்கள் தெரிவிப்பார்கள்.
அந்த வடமொழி பிராமணர்களுக்கு உரிய மொழியாக இருக்கின்ற காரணத்தால் பிராம ணர்கள் செல்வாக்குள்ள ஜாதியினராக தங்களை உயர்த்திக்கொண்ட காரணத்தால், பிராமணன் கையிலே இருந்த மொழி-அது உயர்ந்த மொழி; பிராமணன் பயன்படுத்திய மொழி-தேவமொழி; பிராமணன் அர்ச்சனைக்குப் பயன்படுத்திய மொழி-அது உயர்ந்த ஆற்றல் வாய்ந்த மொழி.
ஜெர்மன் நாட்டு அறிஞர் குறிப்பாக மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் பார்த்தார்கள். இந்தியா என்றால் வடமொழி. வடமொழி என்றால் ஆரியம்; ஆரியம் என்றால் ஜெர்மானியர்களுக்கும் ஆரியத்துடன் தொடர்புண்டு. ஆக இந்த மொழியின் பெருமையை நிலைநாட்ட, நிலைநாட்ட, அந்த மொழியை உலகத்திலே கொண்டுபோய் பரப்புவதன் மூலமாக ஆரியம் செல்வாக்கு பெறும் என்ற உணர்வோடு மாக்ஸ் முல்லரும் அவரோடு சேர்ந்த சில அறிஞர்களும் இருந்தனர்.
அதனால் வடமொழி நூல்களைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அக்காலத்திலே தென்னாட்டிலே இருந்த தலைமை பீடம் சென்னையிலே இருந்த ஆங்கில அரசுகூட கல்கத்தாவிலே தலைமை பீடம் மாறிய காரணத்தால் தொடர்ந்து கல்கத்தாவிலே உள்ள தலைமை வெள்ளைக்காரர்களுடைய பிரதி நிதியாக இருந்த கவர்னர் ஜெனரல் போன்ற வர்களிடத்திலே தொடர்பு கொள்ளக் கூடிய வர்கள் எல்லாம் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள். நீதிமன்றங்களில் சமஸ்கிருதம்
தென்னாட்டிலே பாதிரிமார்களிடத்திலே சில தமிழ்ப் புலவர்களும் தொடர்பு கொண்டி ருந்தார்கள். அது தென்னாட்டில். இது தமிழக அளவிலே முடிந்துவிட்டது. அகில இந்திய அளவிலே நீதிமன்றங்களிலே பார்சிய மொழி, சமஸ்கிருத மொழி. பார்சிய மொழி இஸ்லாமியர் களுக்காக; சமஸ்கிருதம் இந்தியர்களுக்காக-இந்துக்களுக்காக. ஆகவே அவர்களுடைய கலாச்சாரத்தைத்தான் நீதிமன்றங்களிலே எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது.
சமஸ்கிருதம்தான் உயர்ந்தமொழியாக, செல்வாக்குள்ள மொழியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், எல்லா மொழியும் சமஸ் கிருதத்திலே இருந்து பிறந்தது; தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் சமஸ்கிருதத்திலே தோன்றியது என்ற கருத்து. எந்த மொழியும் சமஸ்கிருதத்திற்கு அப்பால் வளர்ந்த மொழி அல்ல. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் மனிதரல்லர்
இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர் களைத் தவிர மற்றவர்கள் மனிதரல்லர் என்று கருதப்படக் கூடிய அளவுக்கு ஒரு கருத்து இந்த நாட்டில் சமஸ்கிருதத்தின் மூலமாக ஊன்றப் பட்டது.
பிரம்மாவின் முகத்திலே பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலே பிறந்தவன் வைசியன், பாதத்திலே பிறந்தவன் சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?
முகத்தைத்தானே மதிக்க வேண்டும். தொடையை அவன் மதிப்பானா? அது வேற காரியத்திற்கு ஆக. அதனுடைய விளைவு என்ன? மற்றவன் எல்லாம் மனிதனல்ல. பார்ப்பனியத்தின் செல்வாக்கிற்காகவே சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது.
தமிழ் சொற்கள் கூட ரிக்வேதத்திலே இருக்கிறது என்று எடுத்துச்சொன்ன சான்றுகள் உண்டு என்றாலும் கூட, இந்த சொற்கள் எல்லாம் நம்மிடமிருந்து குடியேறி அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள். அந்தப் பெருமையை நாம் பேச நமக்கு வாய்ப்பில்லை.
தமிழ் தாழ்ந்த மொழியா?
வடமொழிச் சொற்கள் தமிழிலே வந்து இடம் பெறுமானால் உலகத்திலே சமஸ்கிருதத்தினுடைய உதவி இன்றி தமிழ் இயங்காது ஆக, தமிழ் தாழ்ந்த மொழி; வடமொழி உயர்ந்த மொழி என்ற அடிப்படையிலே பார்ப்பனிய செல்வாக்கு வளர்ந்து அதனுடைய விளைவாக இந்தியா என்றால் ஆரியம் என்ற கருத்துதான் 200 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தது.
அதற்கு அடுத்து சர்ஜான் ஹார்ட்ஸ் போன்ற வர்கள் ஒரு 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பின்னால் வடமொழி ஆய்விலே, அதே போல மொகஞ்சதாரோ சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஈடுபட்ட வர்கள்தான். அவர்களுடைய கருத்துகளில் சொன்னார்கள். வடமொழியிலே ஏராளமான கருத்திருக்கிறது உண்மை. அவைகளை எல்லாம் ஆய்வோம். இனியும் ஆய்வு செய்ய வேண்டுமானால் தமிழ் போன்ற மொழிகள் இருக்கின்றன. அந்த மொழியின் கருத்துகளை, ஏடுகளை ஆய்வு செய்யலாம் என்று ஆய்வு அறிஞர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையிலே இன்னும் பல மொழிகள் இருக்கின்றன என்று சொல்லக்கூடிய நிலை மேல்நாட்டவர்களிடம் உருவானது. கால்டுவெல் இல்லையென்றால்....
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேல் நாட்டார்தான் தமிழுக்கு ஏற்றம் தந்தனர். நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். டாக்டர் கால்டுவெல் மட்டும் இல்லை என்று சொன்னால் திராவிட நாட்டில் அந்தப் பெயரை நாம் காப்பாற்றியிருக்க முடியாது(கைதட்டல்). தந்தை பெரியார், அண்ணா அதற்காகப் போராடினார்கள். ஒரு வேளை அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அது மறைந்துபோகிற சூழ்நிலை உருவாகியிருக்கும்.
கால்டுவெல்தான் தமிழ்மொழி ஒரு தனிமொழி, தென்னாட்டு மொழிகள் ஒரு தனி குடும்பம், அந்தக் குடும்பம் ஆரியக் குடும்பம் அல்ல; அந்தக் குடும்பம் திராவிட குடும்பம் இதை எடுத்து நிலைநாட்டியவர் 1858 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்திலே டாக்டர் கால்டுவெல் அவர்களின் ஒப்பியன்மொழி நூல் வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான் நிலைநாட்டப்பட்டது.
மனோன்மணீயம் சுந்தரனார்
அதனுடைய தாக்கம்தான் மனோன்மணீயம் சுந்தரனார் நீராரும் கடலுடுத்த என்ற பாடலை பாடினார்.
ஆரியம் போல் வழக்கொழிந்து
அழிந்திடா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே என்று
மனோன்மணீயம் சுந்தரனார் பாடினார். தமிழன் என்ற மானஉணர்வோடு பாடினார். அவர் ஓர் இறைப் பற்றாளர். இறைப் பற்றாளருடைய மனதிலே இந்த வேதனை எப்படிப் புகுந்தது என்று கேட்டால் இறைவனைப் பாடுவதற்கு நம்முடைய தமிழிலே இடம் இல்லை. வடமொழிக்குத்தான் அந்தச் சிறப்பு உண்டு என்று சொல்லுகின்றார்களே, அந்த மொழி செத்துப் போய்விட்டது என்று சொல்லுகின்றார். அதே உணர்வு மறைமலை அடிகளுக்கு இருந்தது; ஏறத்தாழ அதே உணர்வு கா.சுப்பிரமணிய பிள்ளைக்கு இருந்தது;
நாவலர் சோமசுந்தர பாரதியார்
அதே நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கு இருந்தது. அந்த உணர்வைக் கொண்டு சென்ற ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசிக்கொண்டே வந்தார். அப்படி பேசிக்கொண்டு வரும்பொழுது சமஸ் கிருதம் என்று சொல்லமாட்டார். ஜம்சு கிருதம்
ஜம்சுகிருதம் என்று வேண்டுமென்ற அந்தச் சொல்லை விரும் பாமல் சொல்லுவார். ஜம்சு கிருதம் படித்தவன் எல்லாம் பெரிய பண்டிதர் என்று சொல்லுகின்றான். வடமொழியில் என்ன இருக்கிறது.? தமிழில் என்ன இல்லை? என்று கேட்டுவிட்டு அந்த ஜம்சு கிருதம் செத்துப்போய் நீண்ட காலம் ஆகிவிட்டது என்று சொன்னார்.
நாவலர் சோமசுந்தரபாரதியார் பேசுகிற பொழுது தமிழறிஞர்கள் கூட குறுக்கிட மாட்டார்கள். ஒருவர் திடீரென்று எழுந்து கேட்டார். அய்யா, நாவலர் அவர்களே! ஜம்சுகிருதம் செத்துப்போய்விட்டது என்று சொல்லு கின்றீர்களே! என்று சொன்னார். ஏன்? என்று நாவலர் கேட்டார். அது பிறக்கவே இல்லையே! என்று கேள்வி கேட்டவர் பதில் சொன்னார் (கைதட்டல்).
தமிழ்மொழி போல பிறந்தமொழி என்னும் சிறப்பு வட மொழிக்குக் கிடையாது. வடமொழி செய்யப் பட்டது. பல மொழிகளிலே இருந்து கடன் வாங்கி செய்யப்பட்ட மொழி.
கடன் வாங்கப்பட்ட மொழி
வெளிநாட்டிலேயிருந்து நூல்வாங்கி, இங்கு நெசவு செய்யப்படுவது போல் கடன் வாங்கப்பட்ட மொழி அது. அது பிச்சைக்காரன் பாத்திரம்

பேராசிரியர் அவர்கள் தன் வரலாற்றுத் தொகுப்பை எழுத வேண்டும்



அறிஞர் அண்ணாவுக்கும் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனுக்குமான நெருக்கம் என்பது தலைமுறைகளைக் கடந்த ஒன்று. பேராசிரியர் அன்பழகனின் தந்தையார் கலியாணசுந்தரம் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவர். சிதம்பரம் பகுதியில் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கியக் காரணகர்த்தா. அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையின் வளர்ச்சிக்காக சிதம்பரம்  பகுதியில் "சந்திரோதயம்' நாடகத்தை நடத்தி நிதி சேகரித்துக் கொடுத்தவர்.1940களிலிருந்தே அண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடைய பேராசிரியர் அன்பழகன், தனக்கும் தனது தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சந்திப்புகளை, அனுபவங்களை, நிகழ்வுகளைப் பல்வேறு கட்டுரைகள் மூலம் பதிவு செய்திருக்கிறார். அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் என்று பேராசிரியர் அன்பழகனின் பதிவுகளைத் தொகுத்து "மாமனிதர் அண்ணா' என்ற பெயரில் புத்தக வடிவமாக்கி இருக்கிறார்கள்.1937-ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகரப் பூங்காவில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்திருந்த அண்ணாவின் பேச்சை 9-ஆம் வகுப்பு மாணவனாக அன்பழகன் கேட்டது -1942-ஆம் ஆண்டு சிதம்பரத்துக்கு அருகிலுள்ள வெள்ளியக்குடியில் நடந்த இயக்கத் தோழர் முருகேசன் என்பவரின் திருமணத்துக்கு ரயிலில் வந்த அண்ணா, பயணக் களைப்பில் தூங்கி மயிலாடுதுறையில்போய் இறங்கி, தாமதமாகத் திருமணத்துக்கு வந்ததும், அண்ணாவுக்காக மணமகன் இரண்டாவது முறை தாலி கட்டித் திருமணம் செய்துகொண்டது பற்றிய பதிவு -1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு முன்பு, தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம், ""அண்ணா, தங்களை அல்லவா இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? இலட்சக்கணக்கான இளைஞர்கள் தந்தை பெரியார் அவர்களை மதித்துப் போற்றினாலும், வாழ்த்தி முழங்கினாலும், அவர்கள் எல்லோரும் இயக்கத்தின் இலட்சிய வெற்றிக்கு வழிகாட்டத் தங்களையல்லவா நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? அந்த இளைஞர்கள் செயல்படுவதற்கு, வழிகாட்ட  ஓர் அமைப்பு, அரசியல் இயக்கம் தேவையில்லையா?'' என்று அண்ணாவின் அன்புத் தம்பி அன்பழகன் எழுப்பிய வினாவும், அதற்கு அண்ணா அளித்த பதிலும் -இப்படி வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம், கட்டுரைக்குக் கட்டுரை சுவாரஸ்யமாகவும் பல புதிய செய்திகளைத் தாங்கியதாகவும் அமைந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.பேராசிரியர் அன்பழகன் தனது சுயசரிதையையோ அல்லது தனது நினைவுக் குறிப்பையோ ஒரு தொடராக எழுதாமல் இருப்பது என்ன நியாயம்? சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த இயக்கங்களின் முன்னோடிகள், சுதந்திர இந்தியாவின் தலைவர்கள், நிகழ்வுகள் என்று கடந்த  முக்கால் நூற்றாண்டு கால இந்திய சரித்திரத்துக்கே நேர்சாட்சியாக, ஆட்சி மையத்தின் பார்வையாளராக இருந்தவர் என்கிற முறையில், தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை நிதியமைச்சர் அன்பழகனுக்கு உண்டுதானே? அவர் ஏன் அந்தக் கடமையைத் தவிர்க்கிறார் என்கிற தார்மிகக் கோபம் இந்தத் தொகுப்பைப் படித்தவுடன் அவர்மீது எழுகிறது.சட்டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்த அனுபவமும், பல ஆண்டுகள் அமைச்சராகவும், திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த அனுபவமும், எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன? "மாமனிதர் அண்ணா'வைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் தனது அனுபவங்களை ஓர் ஆவணப் பதிவு செய்தே தீர வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் சார்பில் அடியேன் முன்வைக்கும் வேண்டுகோள் இது!

நன்றி-கலாரசிகன் இதழ்

(பேராசிரியர் அன்பழகனார் தமிழ் உணர்வு மிக்கக் கவிஞரும் நாவன்மை மிக்கப் பொழிவாளரும் ஆவார். வாழ்க்கை வரலாற்றை மனச் சான்றின்படி எழுதினால் சில குழப்பங்கள் நேரலாம் அல்லது மறைத்து எழுத விரும்பாமை போன்றவற்றால் எழுதாமல் இருக்கலாம். ஆனால். தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் கொண்ட பேராசிரியர் அவர்கள் பின்னர் வெளியிடும் நோகிகலாவது தன் வரலாற்றுத் தொகுப்பை எழுத வேண்டும். கலாரசிகன் வேண்டுகோளைத் தனிப்பட்ட வேண்டுகோளாக் கருதாமல் தமிழ் உலக வேண்டுகோளாகக் கருதி நிறைவேற்ற வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் )

தொல்காப்பிய உரை இடைச்செருகல்களைக் களைய வேண்டும்

சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகம் பதிப்பித்த 81 நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல்
சென்னை, ஜன.2: தொல்காப்பிய உரைகளில் காணப்படும் இடைச்செருகல்களைக் களைந்து புதிய உரையை எழுத தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என நிதி அமைச்சர் க. அன்பழகன் வலியுறுத்தினார்.சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகத்தில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பித்த 81 நூல்கள் வெளியிடப்பட்டன.நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல் பிரதிகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.விழாவில் க. அன்பழகன் பேசியது:திருவனந்தபுரத்தில் ச.வே. சுப்பிரமணியன் ஆரம்பித்த திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனமே தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், ஆந்திரத்தில் திராவிட மொழியியல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக அமைந்தது.இலக்கியங்கள் அதிகமாக உள்ள மொழிக்கு மட்டுமே இலக்கண நூல் எழுத முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியம் கி.மு. 500}ல் வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், அதற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் செழுமையான இலக்கியங்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.இத்தகைய செழுமையான இலக்கியங்கள் உருவாக வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அதிக மக்களால் பேசப்பட்டிருக்க வேண்டும்.   அவ்வாறு பேசப்பட்டிருக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழி உருவாகியிருக்க வேண்டும்.திருக்குறள் மட்டுமே உலக பொது நூலாக கருதப்படுகிறது. ஆனால், தொல்காப்பியம் தொடர்பான தனது நூல்களில் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியத்தை உலகப் பொது நூல் என குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியரின் நோக்கம் மொழிக்கு இலக்கணம் வகுப்பது. திருக்குறளின் நோக்கம் மனித வாழ்வுக்கு இலக்கணம் வகுப்பது. எனவே, தொல்காப்பியம் தமிழின் தனி சிறப்புக்குரிய நூல் என்றே கருதப்படுகிறது.தொல்காப்பியத்துக்கு பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஆனால், தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி- கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வர்ணாஸ்ரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையை தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என்றார் அன்பழகன்.ச.வே. சுப்பிரமணியன் பேசியது: நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் அந்த மொழியில் இலக்கண நூல் இல்லை. பெரும்பாலான மொழிகளுக்கு சம்ஸ்கிருதத்திலும், சில மொழிகளுக்கு ஆங்கிலத்திலும் இலக்கண நூல்கள் உள்ளன. சொந்த மொழியிலேயே இலக்கண நூல் பெற்ற சிறப்பு தமிழுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் செம்மொழியாக அறிவிக்க தொல்காப்பியமும் ஒரு சான்றாக உள்ளது.10 ஆயிரம் ஆண்டு இலக்கியங்கள் இருந்தால் மட்டுமே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் எழுத முடியும். ஏராளமான இலக்கியங்களை ஒலைச்சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாக பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் தொல்காப்பியத்தை மட்டும் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார் என்றார் சு.வே. சுப்பிரமணியன்.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ, மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், மெய்யப்பன் பதிப்பக உரிமையாளர் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி: அன்பழகன் விளக்கம்!






சென்னை, ஜன.3_ திராவிட பல்கலைக்கழக அனுமதி கேட்க சென்ற-வர்களிடம் திராவிட என்ற சொல்லை நீக்கு-மாறு அப்போதைய மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்-ளார். ச.வே.சுப்பிரமணியன் எழுதிய 81 நூல்கள் வெளி-யீட்டு விழா சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் நூல்களை வெளியிட நல்லி குப்பு-சாமி பெற்றுக் கொண்-டார். பின்னர் அன்பழ-கன் பேசியதாவது:

திராவிட பல்கலைக்கழகம்: தமிழறிஞர் வ.அய்.சுப்பிர-மணியம் ஆந்திர மாநி-லம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அர-சின் ஒப்புதல் கேட்டு அப்போதைய கல்வி அமைச்சர் முரளி மனோ-கர் ஜோஷியை சந்தித்-தார். அனுமதி கொடுத்து விடுகிறேன். திராவிட என்ற பெயரை மட்டும் எடுத்துவிடுங்கள் என்று ஜோஷி கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணியம், தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் நீக்கிவிட்டால், இந்த பல்கலைக்கழகத்தில் வரும் திராவிட என்-பதையும் நீக்கி விடுகி-றோம் என்று பதில-ளித்தார். ஜோஷி வாய-டைத்து போனார். தமிழ் செம்மொழி ஆனதை கேட்டு நெஞ்சடைத்து போயிருக்கும்.
நான்கு வர்ணம் இல்லை: உலக பொதுமறை தொல்காப்பியம் என்று ச.வே.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திருக்குறள்-தான் உலக பொதுமறை. தொல்காப்பியம் தமிழர்-களின் பெருமைக்குரியது. எழுத்து, சொல், ஆகிய-வற்றை வடமொழிக்கு தமிழே கடன் தந்தது.
வடமொழிக்கு எழுத்தே கிடையாது. அது இந்தோ _ அய்-ரோப்பிய எழுத்து என்கிறார்கள். ஆனால் அந்த வகை எழுத்து-களுடன் வடமொழி எழுத்து ஒத்துவர-வில்லை. தமிழுக்கு செம்-மொழி தகுதியை பெற்று தருவதில் முதலிடம் வகிப்பது தொல்காப்-பியம். தமிழனின் மரபு என்று பிரித்துக் காட்டி மாற்றாக வருவதையெல்-லாம் அன்னியம் என தவிர்த்து பாதுகாக்கவே தொல்காப்பியம் தோன்றி-யது. தொன்மையான இந்த நூலும் இடைத்-செருகலுக்கு ஆட்பட்டி-ருக்-கிறது, அதை மறுக்க முடியாது. வேற்று கலாச்-சார கருத்துகளும் அப்-படி இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலத்-தில் மேல் மக்கள் உண்டு, மேல் ஜாதி இல்லை. நான்கு வர்ணம் இல்லை, மனு ஸ்மிருதி இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின-ருக்கு திருமண உரிமை இல்லை. அவர்கள் இணைந்து மட்டும் வாழ-லாம் என்ற வைதீக கலாச்சார கருத்துகள் தொல்காப்பியத்தில் இடம்-பெற்றுள்ளன. இடைச் செருகல்களை களைந்து தனித் தமிழ் படைப்பாக தொல்காப்-பியத்தை ச.வே.சுப்பிர-மணியன் ஆக்கித்தர வேண்டும். ஆந்திர, கர்-நாடக பகுதிகளில் பழந்-தமிழனின் தொடர்ச்சி இல்லாதலால் அங்கு காப்பியங்கள் என்றாலே ராமாயணம், மகாபாரதம் என்றாகிவிட்டது. தமிழ் என்றால் பகை என்ற அளவுக்கு அது வளர்ந்து விட்டது. இவ்வாறு க. அன்-பழகன் பேசினார். ச.வே.சுப்பிரமணியன் ஏற்புரை ஆற்றினார். பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம், சிலம்-பொலி செல்லப்பன், முன்-னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, அறவாணன் உள்பட பலர் பேசினர்.

thank: viduthalai.periyar.org.in

ஏழை - எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பது கேலிக்குரியது அல்ல!






சென்னை, பிப்.11- ஏழை - எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பதுபற்றி கேலி செய்வது குறித்து நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்ப ழகன் அவர்கள் பதிலடி கொடுத்தார்.

தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்மீது கடந்த சில நாட்களாக நடந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று (10-2-2011) பதிலளித்துப் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

அரசின் திட்டங்கள் எல்லாம் தோல்வி என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியிருக் கின்றன.

தொழிலாளர்களுக்கு செய்த நன்மைகள் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ஆகியவை எல்லாம் தோல்வியா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

வருவாய் கணக்கில் செய்யப்படும் செலவு, உபரியாக இருக்கும் அளவுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடன் சுமை அளவோடு ஏறுமானால், மூலதனக் கணக்கில் செய்யப்படுகிற செலவு அத்தனையும் சமுதாய கட்டுமானப் பணிகளுக்காக, சமூகநலப் பணிகளுக்காக இருக்குமானால், அது சமு தாயத்துக்கு நன்மை செய்யும் காரணத்தால், அது விரும்பத்தக்க கடன்தான். நம்மைப் பார்த்து கடன் வாங்காதே என்பவர்களும் அவர்கள் ஆட்சியில் இருக்கும் காலத்தில் கடன்தான் வாங்கினார்கள்.

நாங்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்து விலகுகிறபோது ரூ.28 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அதை குற்றமாக கூறியவர்கள் ஆட்சிக்கு வந்து, அந்த ஆட்சி நீங்கியபோது அவர்கள் விட்டுச் சென்ற கடன் ரூ.56 ஆயிரம் கோடி. இன்றைக்கு அது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உற்பத்தி, வரி, வருவாய் பெருகியிருக்கிறது. பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் தொகுப்பு நிதியில் நமக்குள்ள பங்கு கூடியுள்ளது. எனவே கடன் அதிகமானது, எந்த வகையி லும் குறைகூறக் கூடியது அல்ல.

இந்த கடனால் தமிழகம் வாழ்கிறது என் றேன். அந்த `வாழ்கிறது' என்ற வார்த்தையை தவறான கருத்தில் கூறினர். `வளர்கிறது' என்ற அர்த்தத்தில் பேசினேன்.

விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ன?

விலைவாசி உயர்வுக்கு இயற்கையே முதல் காரணம். அடுத்ததாக தேவையின் மிகுதி, பங்கீட்டுக்கான வாய்ப்பு, பங்கீட்டின் போது கைமாறும் நிலையில் ஏற்படும் மாற்றம் போன்றவைகளால் விலை ஏற்றம் ஏற்படு கிறது. உலகம் முழுவதும் இடைத்தரகு உள்ளன. அந்தத் தொழிலும் வாழ வேண்டும். விலைவாசி ஏறினாலும் இறங்கினாலும் ஒரு தரப்பினருக்கு பாதிப்பில்லை.

ஆனால், சாதாரண மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது. எனவே விலைவாசி ஏற்றத்தின் போது இவர்களுக்கு பட்டினி, பசி போன்ற பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பது அரசின் கடமை. அதனடிப்படையில்தான் அரிசி, எண்ணெய், பருப்புகள் போன்ற வற்றை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குகிறோம். மற்றவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை, பட்டினி இல்லை. இதன் மூலம் விலைஏற்றத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் தவிர்க்க முடியா தது. விலை ஏற்றத்தினால் வரும் பாதிப்பை இந்த அரசு பெருமளவில் தடுத்துள்ளது. உணவுப் பண்டங்களின் விலையை குறைப் பதற்காக ரூ.4 ஆயிரம் கோடி மானியம் வழங்கி, அதை கட்டுப்படுத்தி வைக்கிறது.

தொழில் வளர்ச்சிகள் ஏற்பட்டாலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பதை கவனிக்கும் முறை இந்த அரசிடம்தான் உள்ளது. உணவுப் பண்டங்களில் விலையைக் குறைத்து மக்க ளுக்கு கிடைக்கச் செய்யும் காரியத்தில் இந்தி யாவில் வேறு எந்த அரசும் இந்த அளவுக்கு ஈடுபடவில்லை. இலவசத்தை கேலி செய் கிறார்கள். ஆனால் இலவசம்தான் ஏழை யைக் காப்பாற்றுகிறது. பட்டினியைப் போக்கி, சமூகநல திட்டத்தின் அடிப்படை யாக இருப்பது இலவச திட்டங்கள்தான்.

வளர்ந்த நாடுகளில் வேலையில்லாதவர் களுக்கு ஊதியத்தையே இலவசமாக வழங்கு கிறார்கள். எனவே இலவசம் கேலிக்குரிய தல்ல. ஒரு காலகட்டத்தில் பெருமையாகக் கருத்தப்பட்ட தானதர்மம் தான் அந்த இல வசம். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் அது சூட்சுமத்தோடு அரசு கொடுப்பதாக ஒரு தவறான கருத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். மூலதனச் செலவுக்காக பயன்படுத்த வேண் டிய கடன் தொகையில் இருந்து இலவசங் களை அரசு வழங்கவில்லை.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- பெட்ரோல் விலை உயர்வுதான் விலைவாசி ஏற்றத்துக்குக் காரணம். உலக அளவில் உயர்வதாகக் கூறினாலும், அருகில் உள்ள நாடுகளில் பெட்ரோல் விலை ஏறவில்லை. ஏன் இந்தியாவில் மட்டும் உயர்கிறது? அதை இங்குள்ள தனியார் நிறுவனங்கள் உயர்த்து கிறார்கள். பெட்ரோல் கண்காணிப்பு குழுவில் மத்திய ரசாயனத்துறை அமைச்சரும் இடம் பெற்றிருக்கிறார். பெட்ரோல் விலை உயர்வு எங்களை பாதிக்கிறது என்று ஏன் கூட்டத்தில் அதை தெரிவிக்கவில்லை?

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை

அமைச்சர் க.அன்பழகன்:- அது அரசின் கொள்கை. பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சாதாரண மக்கள் பேருந்தில் பயணிக்கும் போது பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் 5 ஆண்டு கள் ஆட்சி நடைபெற்றுள்ளது. வசதியுள்ளவர் பெட்ரோல் வாங்குவது பற்றி யார் கவலைப்பட வேண்டும்? ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என்றபோதுதான் நாங்கள் கவலைப்பட வேண்டுமே தவிர, வசதியுள்ளவர்களுக்கு விலையை குறைத்துத் தர வேண்டும் என்பது கட்டாயமில்லை.

வெளிநாட்டில் இருந்து வரும் பொருள்களின் விலைவாசி உயரத்தான் செய்யும். கார் விலை எவ்வளவோ கூடியுள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் காரில் செல்லாமலா இருக்கிறார்கள்?

நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- விலைவாசி ஏற்றத்தை நியாயப்படுத்திவிடக் கூடாது என்பதைத் தான் நான் கவலையோடு சுட்டிக்காட்டுகிறேன். கட்டுப்படுத்துவோம் என்ற ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடாதா?

அமைச்சர் க.அன்பழகன்:- யாருக்காக கட்டுப் படுத்த வேண்டுமோ அவர்களுக்கு கட்டுப்படுத்து கிறோம். யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு ஏன் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்?

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):- நாங்கள் விலை குறைந்த டீசல் காரில்தான் செல்கிறோம். ஆனால் ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடுகின்றன. அதில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.

அமைச்சர் நேரு:- அதற்காகத்தான் சென்னையில் கியாஸ் ஆட்டோக்களை விட்டிருக்கிறோம்.

அமைச்சர் க.அன்பழகன்:- தமிழகத்தில்தான் பயங்கரவாதம், நக்சலைட்வாதம், வன்முறைகள் இல்லை. தனிப்பட்ட முறையில் நடக்கும் குற்றங்களின் புள்ளிவிவரங்களை கணக்கிட்டால் கடந்த காலத்தில் நடந்ததைவிட குறைவுதான்.

பக்கத்து மாநிலங்களில் நடந்த குற்றங்களின் விகிதாச்சாரத்தைவிடவும் குறைவுதான். கடந்த ஆட்சி காவல்துறையை விட இந்த கால காவல்துறை சிறப்பாக, திறமையாக செயல்படுகிறது. 80 சதவிகித குற்றங்கள், திருட்டுப் பொருட்கள் மீட்பு கண்டுபிடிக்கப்படுகின்றன.

முதலமைச்சரைப் புகழக் கூடாதா?

தமிழ் செம்மொழி மாநாடு, முதலமைச்சரை புகழ்வதற்காக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஏன் முதல்-அமைச்சரை புகழக் கூடாதா? அரசியல் வாடையே இல்லாமல் நடந்து முடிந்ததாக பத்திரிகைகள் எழுதியுள்ளன. ஆனால் தஞ்சையில் நடந்த மாநாடு எப்படிப்பட்ட அலங்கோலத்தோடு நடத்தப்பட்டது? அதற்காக அழைக்கப் பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஈழத்தில் இருந்து வந்த அறிஞர்களும் கலந்து கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அன்று வைக்கப்பட்ட கட்-அவுட் எல்லாம் அந்த முதலமைச்சருக்குத்தான். தஞ்சைப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை அறிவித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. எல்லாவற்றிலும் ஊழல். அதற்காக விசாரணை. விசாரணை முடிவில், தவறான முறையில் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. தஞ்சை மாநாடு போல கோவை மாநாடு நடக்கவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

ஆரியர்களுக்கு மனிதத்தன்மை இல்லை!

எதிரிகளுக்கிடையே நாம் வெற்றி முரசு
கொட்டிக் கொண்டிருக்கின்றோம்!
நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் உரை


நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:

நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா

நீதிக்கட்சியினுடைய 95ஆம் ஆண்டு விழா இவ்வளவு சீரோடும், சிறப்போடும் நடைபெறுகிற பொழுது இந்த விழாவிலே கலந்துகொள்ளுகிற வாய்ப்பை எனக்கு வழங்கி என்னை பெருமைப் படுத்தியிருக்கின்ற என்னுடைய அன்புக்குரிய நண்பர்களுக்கு, வீரமணி அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எவ்வளவோ மாற்றங்கள்



நீதிக்கட்சித் தோன்றியபொழுது எந்த சூழ் நிலையிலே தோன்றியதோ அந்த நிலையிலே இருந்து எவ்வளவோ மாற்றங்களை இன்றைக்கு நாம் பெற்றிருக்கின்றோம்.


அன்றைக்கு எது இலட்சியமாக இருந்ததோ அந்த இலட்சியம் விரிவடைந்து கொண்டே யிருக்கிறது. அந்த குறிக்கோள் மேலும், மேலும் ஆழப்பட்டு வருகிறது. அகலப்பட்டு வருகிறது. உயர்ந்து வருகிறது.


மேலும் ஆற்றல் மிக்கதாக உருவாக்கி வருகிறது. உண்மையிலேயே நீதிக்கட்சி தோன்றியபொழுது மிகப்பெரிய செல்வாக்குடைய-செல்வமுடைய தலைவர்கள் ஜமீன்தார்கள், வியாபாரிகள், முன்னணியினர்கள் அவர்கள் மட்டும்தான் இந்த இயக்கத்திலே இருக்க முடிந்தது. அதற்கான காரணம் அவர்களுக்குத்தான் அந்தக் காலத்திலே அரசியல் சூழ்நிலைகளை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது.

ஏழை, எளிய மக்களுக்கு வாக்களிக்கக்கூட உரிமை இல்லை

ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளிகள் அவர்கள் எல்லாம் அரசியலைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை இல்லை. வாக்களிக்கக் கூடிய வாய்ப்பும் அவர்களுக்கு அந்தக் காலத்திலே கிடையாது.


வெள்ளைக்காரர்களுடைய காலத்திலே வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் எப்படியோ பி.ஏ., படித்துவிட்டு, எம்.ஏ.படித்துவிட்டு, டாக்டருக்குப் படித்துவிட்டு உலகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கிய அந்த முன்னணித் தலைவர்தான் முதன் முதலாக நீதிக்கட்சிக்கு வித்திட்ட நம்முடைய பெரியவர் நடேச முதலியார்.


தியாகராயச் செட்டியார், டாக்டர் டி.எம்.நாயர், அதிகம் படிக்கவில்லை என்று சொன்னால் கூட, எதை எதைப் படித்தால், என்ன படித்தால், என்ன பேசலாம் என்று தெரிந்து படித்த தந்தை பெரியார் அவர்கள் எல்லாம் (கைதட்டல்). இந்த இயக்கத்தை உருவாக்கி வளர்ப்பதற்கு முன்னோடியாக விளங்கினார்கள் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.



நான்கு தலைவர்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை


இந்த நான்கு பேருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த நான்கு பேரும் காங்கிரசிலே இருந்தவர்கள். நான்கு பேருக்கும் ஓர் ஒற்றுமை-அவரவர்கள் சுயமாக சிந்தித்தவர்கள். நான்கு பேருக்கும் ஒரு ஒற்றுமை-நான்கு பேரும் சேர்ந்து திராவிடத்தை உருவாக்குகிறார்கள். (கைதட்டல்).



நடேச முதலியார் தமிழர் என்ற பெருமைக்குரியவர். தியாகராயர் சென்னையிலே வாழ்ந்தாலும் ஆந்திரர் என்ற சிறப்புக்குரியவர். சென்னையிலே-லண்டனிலே வாழ்ந்தாலும், டாக்டர் நாயர் மலையாளி என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள் தமிழராகவே வாழ்ந்தாலும் கன்னடராகப் பிறந்தவர். எனவே, இந்த நான்கு பேரும் சேர்ந்து திராவிடத்தை உருவாக்கினார்கள்.

1200 ஆண்டுகளுக்கு முன்னாலே....

கன்னடமே தமிழுக்குப் பிறந்தது. (கைதட்டல்). அந்தக் கன்னடப் பெரியாருடைய தாய்மொழி, தியாகராயருடைய தாய்மொழி தெலுங்கும் தமிழில் இருந்து பிறந்ததுதான். 1200 ஆண்டுகளுக்கு முன்னாலே தெலுங்கே, ஒரு தனி மொழியாக சொல்லக்கூடிய நிலை. வடுவு என்று சொல்லுவார்களே தவிர, வடக்குப் பக்கத்திலே தமிழ் வழக்கு என்றுதான் சொல்லு வார்களே தவிர, தெலுங்குக்கு எழுத்து கிடையாது. தெலுங்குக்கு இலக்கியம் கிடையாது. 1200 ஆண்டுகளுக்கு முன்னாலே உள்ள நிலை.



1300 ஆண்டுகளுக்கு முன்னாலே கன்னடமும் பழைய கன்னடமாக, தமிழாகத்தான் இருந்தது. உச்சரிப்பு வேறுபடும். சென்னையிலே பேசுகிற தமிழ் உச்சரிப்பும், குமரியிலே பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வேறுபடுவது போல இருக்கலாம்.

ஒருவர் பேசினால் இன்னொருவருக்குப் புரியும்

அந்த வேறுபாடு குறைந்திருப்பதற்குக் காரணம், வானொலி ஒரு பக்கம், தொலைக்காட்சி ஒரு பக்கம், ரயில் பயணம் ஒரு பக்கம், பேருந்துப் பயணம் ஒரு பக்கம். மக்கள் கலந்து பழகுகிற வாய்ப்பு மிகுதி.



ஏராளமான செய்தித்தாள்கள், புத்தகங்கள் அச்சு எந்திரம் எல்லாம் சேர்ந்து நம்மை நெருக்கி நெருக்கிக் கொண்டு வந்து, ஏறத்தாழ ஒருவர் பேசினால் இன்னொருவர் புரிந்துகொள்ளக்கூடிய நிலையை இந்த 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து நாம் பெற்றிருக்கின்றோம்.



ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே, எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னாலே இந்த வாய்ப்பு வசதிகள் எல்லாம் பெருகாத காலத்தில் உச்சரிப்பு வேறுபட்டு நிலைத்துப் போயிருக்கு மானால் அந்தத் தமிழ் தனித்தனியாகத்தான் ஆகும்.

மொழிக்கு வரலாறு கிடையாது

இன்றைக்கும் கொங்கு தமிழ் என்கிறோம். நாஞ்சில் தமிழ் என்கிறோம். பாண்டிய நாட்டுத்தமிழ் என்று சொல்லுகிறோம். சென்னைத் தமிழ் என்று ஒரு தமிழை அழைக்கிறோம். அப்படி அழைக்க வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அது அந்தக் காலத்திலே எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


இன்னும் சொல்லப்போனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ராஜ ராஜ சோழனோ, குலோத்துங்கனோ அவர்கள் எல்லாம் மன்னர்களாக இருந்தபொழுது அவர்களுடைய பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் கூட, ஆந்திர வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, தெலுங்கு தோழர் என்று பெயர் பெறக்கூடிய அளவிற்கு அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவருடைய மொழிக்கு ஒரு வரலாறோ, பெருமையோ இல்லாத ஒரு காலம்.


அவர்கள் தமிழைக்கூட வெறுக்காத காலம். நான்கு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலே இருந்தபொழுதுதான் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது.

நாயுடு, நாயக்கர், முதலியார்

அப்படி வளர்த்ததிலே மிகப்பெரிய பங்குக்குரியவர்கள் நாயுடு, நாயக்கர், முதலியார் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வரதராஜுலு நாயுடு, தந்தை பெரியார், திரு.வி.க-அந்த மூன்று பேரும்தான்.


அப்புறம் ஆச்சாரியார், சர்மா, சாஸ்திரிகள் எல்லாம் இருந்தார்கள். அவர்களிடத்திலே கட்சி இருந்தது. பிரச்சாரம் இவர்களிடத்திலே இருந்தது. ஆக அப்படி ஒரு காலம் ஆனாலும், நீதிக்கட்சி தோன்றியபொழுது என்ன நிலை?

வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது.....

வீரமணி அவர்கள் பேசுகிற பொழுது மேடையில் துணைவேந்தர், படித்தவர்கள் எல்லாம் இருக்கிறோம் என்று சொன்னார். அவருக்கு நான் இன்னொன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு கூச்சப் பட்டுக்கொண்டு இருக்கின்ற துணைவேந்தர்கள் இன்னும் பல பேர். இருக்கிறார்கள. (கைதட்டல்). இங்கே வராத அறிஞர்கள் பல பேர்.

வரலாறே தெரியாத ஆசிரியர்கள்

வரலாறே தெரியாமல் வரலாற்றை எழுதுகிற ஆசிரியர்கள் எல்லாம் இந்த நாட்டிலே இருக்கிறார்கள். (கைதட்டல்). ஆக, வராதவர்கள் பலர். வந்தவர்கள் பலர். வந்தவர்களுடைய எண்ணிக்கை பெருகியிருக்கிறது-நீதிக்கட்சி போட்ட விதை என்ற அடிப்படையில்தான்.


அ.ராமசாமி படித்து ஒரு துணைவேந்தர் ஆகக்கூடிய அளவிற்கு அவர்களுடைய பாரம்பரியத்திலே ஊக்கத்தைத் தரக்கூடிய சூழ்நிலை நீதிக்கட்சியின் வசம் இருந்தது.


இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சி இல்லை என்று சொன்னால் இன்றைய தமிழ்நாடு இல்லை. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்கிறோமே, அந்த நிலை உருவாவ தற்கான வாய்ப்பு அறிஞர் அண்ணாவாலேயே கூட உருவாக்கியிருக்க முடியாது. அறிஞர் அண்ணா உருவாக்கினார். அதற்கு ஓர் அடித்தளம் இருந்தது. தந்தை பெரியார் அந்தப் பாதையிலே நடைபோடவில்லை.

அரசியலில் உள்ள பித்தலாட்டங்களைப் பார்த்த பெரியார்

அரசியலிலே உள்ள பித்தலாட்டங்களைப் பார்த்துவிட்டு, இது நம்மால் தாங்காது என்று அவர் ஒதுங்கிவிட்டார். தான் ஆலோசனை வழங்குவார்களே தவிர, தானே நேரடிப் பொறுப்பை அவர் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.


ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாம்தானே அந்த வியாதிக்கு மருந்தூட்ட வேண்டும் என்று, யார் இருக்கிறார் என்று கருதி, அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய பின்னர் நீதிக்கட்சி பாரம்பரியத்திலே நாமும் அரசியல் நடத்தத்தான் வேண்டும் என்று கருதினார்.


அதனாலேதான் நீதிக்கட்சியின் 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியிலே அண்ணா பேசுகிற பொழுது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இன்றைக்கு வந்திருக்கிறதென்றால், நாங்கள் நடத்துகிற ஆட்சி நீதிக்கட்சியின் பாரம் பரியத்திலே வந்த ஆட்சி என்று பெருமையோடு சொன்னார்.

நீதிக்கட்சி ஆட்சியில் லஞ்சம்-ஊழல் கிடையாது

இங்கே பேசிய ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் ஈசுவர ரெட்டி பெருமையோடு சொன்னார். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலே ஊழல் கிடையாது; லஞ்சம் கிடையாது; குற்றச்சாற்றுக்கு ஆளானவர்களே கிடையாது; அதுவும் நிதி அடிப்படையிலே-பணம் அடிப்படையிலே குற்றச்சாற்றுக்கு ஆளானவர்களே கிடையாது. அப்படி ஒரு நல்ல ஆட்சி நீதிக்கட்சியினாலே நடைபெற்றது என்று சொன்னார்.


இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் நீதிக்கட்சி குறைகளைப் போக்கத்தான் குரல் கொடுத்தார்கள். முதல் குரல் பள்ளிக் கூடத்திலே இடம் கொடு. இரண்டாவது குரல் கல்லூரியிலே எங்களுக்கு இடம் வேண்டும். மூன்றாவது குரல் அரசாங்கத்திலே வேலை வேண்டும். நான் வரலாற்று நூல்களினுடைய பல நூல்களின் பெயரைக் கூட எழுதிக்கொண்டு வந்தேன்.

நூல்களின் பெயர்கள்

நம்முடைய இயக்கத்தின் வரலாறு, திராவிடர் இயக்கத்தின் வரலாறு, நீதிக்கட்சியின் வரலாற்றை எல்லாம் நம்முடைய நண்பர்கள் பலபேர் எழுதி யிருக்கின்றார்கள். அந்த நூல்களினுடைய பெயர் களை இந்த நிகழ்ச்சியிலே படிப்பது ஒரு கடமை என்று கருதுகின்றேன். ஒரு நூல் நம்பிஆரூரன்-மறைமலை அடிகளாருடைய பெயரன் எழுதியது. Tamil Renaissance and Dravidian Rationalism அண்மையிலே நம்முடைய க.திருநாவுக்கரசு அவர்க ளாலே மொழி பெயர்க்கப்பட்டு, தமிழ் மறு மலர்ச்சியும், திராவிட தேசியமும் என்னும் நூலாக வந்திருக்கிறது.

க.திருநாவுக்கரசு எழுதிய நூல்கள்

அதே நம்முடைய க.திருநாவுக்கரசு நீதிக்கட்சி வரலாறு தொகுதி (1) தொகுதி (2) என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். மிக விரிவான விளக்கமான, தெளிவான நூல். அதைப் போலவே கே.ஜி.ராதாமணாளன், திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர். அவர் திராவிட இயக்க வரலாறு என்று ஒரு விரிவான நூலை எழுதி வழங்கியிருக்கிறார்கள்.


தமிழ்ப் புலமையும், இயக்கப் பற்றும் கொண்ட ஒரு நண்பர், அவர் பெயர் அண்ணாமலை என்று கருதுகின்றேன். அவர் எழுதிய புத்தகம் பயணம் என்ற பெயரால் மூன்று தொகுதிகள் வெளிவந்திருக்கிறது. ஒரு தொகுதிக்கு 400 பக்கங்கள், 500 பக்கங்கள் கொண்ட நூல்.


பயணம் என்ற நூல் உரையாடல் முறையிலேயே, நாடகப் பாங்கிலே உரையாடல் முறையிலே சமுதாயச் சூழலை சித்திரித்துக் காட்டி, அதனால் நீதிக்கட்சித் தலைவர்கள் இன்ன கொள்கையை எடுத்துச் சொன்னார்கள், இன்ன இலட்சியத்தை மேற்கொண்டனர் என்பதை விளக்கி ஒரு புதினம் படிப்பதைப் போல ஒரு கதை படிப்பதைப் போல இந்த இயக்கத்தினுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவர் தருமபுரி ஆசிரியர் என்று கருதுகின்றேன். அந்தப் புலவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். மிக விரிவான நூல்.


இந்த அடிப்படையிலே மாநில சுயாட்சி எனும் நூலை முரசொலி மாறன் அவர்கள் மிக விரிவாக எழுதியிருக்கின்றார். அதே போல கே.எஸ்.ஆனந்த் அவர்கள் மலர்க மாநில சுயாட்சி எனும் ஒரு விரிவான நூலை அவர் எழுதியிருக்கின்றார். தந்தை பெரியாருடைய வரலாற்றிலேயும் இந்த அடிப்படை உண்மைகள் விளக்கப்படும்.


பேரறிஞர் அண்ணா, அவர்களுடைய வரலாற்றி லேயும் விளக்கப்படும். இவற்றைத் தவிர, திராவிட இயக்கத் தூண்கள் அதுவும் க.திருநாவுக்கரசு எழுதியது என்று கருதுகின்றேன். தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், பனகல் அரசர், அண்ணா, அழகிரி என்று அத்துணைத் தலைவர்களைப் பற்றி எழுதிய நூல்கள் நாட்டிலே வெளிவந்திருக்கின்றன.

நானே பல நூல்களுக்கு அணிந்துரை தந்திருக்கிறேன்

ஆனால், இந்த நூல்களை எவ்வளவு பேர் படிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. நானே கூட பல நூல்களுக்கு அணிந்துரை கொடுத்திருக்கின்றேன். ஆனால் படித்ததாக யாரும் எங்களிடத்திலே சொல்லுவதே கிடையாது; கேட்டதே கிடையாது. காரணம் என்னவென்று கேட்டால், இயக்கத்தைப் பற்றி கூட காதில் கேட்டால் போதும் என்று இருக்கிறார்களே தவிர, படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த இலட்சிய உணர்வு குறைவு.

ஆட்சியில் இருக்கிறோம் என்ற மிதப்பு....

காரணம், நாம் எதிரிகளை வென்று இன்று ஆட்சியிலே இருக்கிறோம் என்ற நினைப்பு நமக்கு ஏற்பட்ட மிதப்பு காரணமாக நம்மை நாமே உணரத் தவறுகின்றோம்.



நாம் ஆட்சியிலே இருக்கிறோமே தவிர, சூழ்ச்சிக்கிடையிலேதான் நாம் ஆட்சியில் இருக்கிறோம். எதிரிகளுக்கிடையே தான் நாம் வெற்றி முரசு கொட்டிக்கொண்டிருக்கின்றோம். பகைவர் படைதிரட்டுவது தெரிந்தும் கூடத்தான் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த அரசியலை நடத்துகின்றோம். ஆகவே, அரண் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணு கிறவர்கள் எல்லாம் இந்த வரலாற்றைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.





பார்ப்பனர்களுடைய கொடுமையை எதிர்த்து
முதல் குரல் கொடுத்தவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள்



பார்ப்பனர்களுடைய கொடு மையை எதிர்த்து அந்த காலத்தில் குரல் கொடுத்த வர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தமது உரையில் கூறி விளக்கினார்.


நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


ஆரியர்களுக்கு மனிதத்தன்மை இல்லை


இந்த இயக்கம் எவ்வளவு ஆழமான தத்துவ அடிப்படையைக் கொண்டது என்று எண்ணிப் பார்த்தால் தமிழனுடைய மரபிலே மனிதத் தன்மையைக் காப்பாற்றுகின்ற அடிப்படை தமிழ் மரபிலே உண்டு. ஆரிய மரபிலே மனிதத் தன்மையைக் காப்பாற்றமாட்டார்கள். மனிதத் தன்மை என்பதற்கே அவசியமில்லை. ஆரியக் கலாச்சாரம் வளர்ந்ததே பிராமணர்களுக்கு முடிசூட்டத்தான்.


பிராமணர்கள்தான் எழுதுவதற்குத் தகுதி படைத்தவர்கள். அவர்கள்தான் சாஸ்திரங்களைப் படைப்பதற்குத் தகுதிபெற்றவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தால் எல்லா சாஸ்திரங்களும் பிராமணர்களுக்கு அடிமை. எல்லா இலக்கியங்களும் பிராமணர்களைப் போற்றுவது.


அது பாரதமோ, இராமாயணமோ, வேறு எந்தக் கதையோ, பார்ப்பானை உயர்த்துவதற்குத்தான் அந்தக் கதைகள் பயன்பட்டன. தென்னாட்டிற்கு வருகின்ற பொழுது இந்த ஆயுதங்களோடு வந்து சேர்ந்தார்கள். தென்னாட்டிற்கு வந்த பிராமணர்கள் பாரதத்தோடு வந்தார்கள். இராமாயணத்தோடு வந்தார்கள். மனுஸ்மிருதியோடு வந்தார்கள். வேத சாஸ்திரங்களோடு வந்தார்கள்.


ஆரியர்களில் பிராமணர்களே உயர்ந்தவர்கள்


இன்னும் சொல்லப்போனால் உயர்ந்தவர்கள் என்ற அந்த உறுமலோடு வந்தார்கள். ஆரியர்கள் உயர்ந்தவர்கள். ஆரியர்களிலேயே பிராமணர்கள் உயர்ந்தவர்கள். தமிழர்கள் தாழ்ந்தவர்கள். அதிலே சூத்திரர்கள் மிகத் தாழ்ந்தவர்கள்-வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாழ்ந்த வர்கள். ஆரியர்கள் மட்டும்தான் உயர்ந்தவர்கள்.


குழந்தை பெற யாரை அழைப்பார்கள் தெரியுமா?


டாக்டர் அம்பேத்கர் சொல்லுவார். ஆரிய ருடைய வேதங்கள், ஸ்மிருதிகளை எல்லாம் படித்துப் பார்க்கின்றபொழுது அவர்களை விட உயரமான இலட்சணமான தோற்றம் உடைய வர்களாக இருந்தால் தங்களைவிட உயர்ந்த ஜாதி என்று ஏற்றுக்கொண்டு அவர்களை பூதேவர்கள் என்று அழைத்து, அந்த பூதேவர்களை இந்த பிராமணர்கள் குழந்தை விருத்தி செய்வதற்கு அழைப்பது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.


அப்படி ஒரு நாகரிகம் அவர்களுடையது. உயரமாக இருந்தால் ஒரு பெருமை. வெள்ளையாக இருந்தால் ஒரு பெருமை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பேசிய மொழி இன்றைய சமஸ்கிருதம் அல்ல. சமஸ்கிருதம் செய்யப்பட்ட மொழி. எதற்காகச் செய்தார்கள்? தங்களுடைய மொழி உயர்ந்தது என்பதற்காகச் செய்தார்கள். ஆண்டவன் மொழி!


மொழி என்ற தகுதியில் அது உயர்ந்ததா என்றால் அல்ல. இலக்கியம் என்ற முறையில் உயர்ந்ததா என்றால் இல்லை. பிராமணர்களுக்குத் தேவையான கருத்துகளை எழுதி வைத்து இதுதான் உயர்ந்த மொழி. இதுதான் கடவுள் மொழி. இதுதான் ஆண்டவனுக்கு, அர்ச்சனைக்கு உரிய மொழி. இதுதான் தேவமொழி என்று அதை உயர்த்தி னார்கள்.


தமிழ் மொழியோ, தெலுங்கு மொழியோ, கன்னடமோ, மலையாளமோ வேறு ஏதாவது மொழி இந்தியாவில் இருந்திருக்குமானால் பிராகிருதங்கள் எல்லாம் நீச மொழிகள். மனிதர்கள் ஏதோ பிழைப்புக்கு பேசுகிற மொழி.


முதல் குரல் கொடுத்தவர் டாக்டர் நடேசனார்


அவைகளில் இலக்கியம் இருந்தாலும் நல்ல கதை இருந்தாலும் அவைகளுக்கு மதிப்பு இல்லை. அப்படி ஒரு காலம். அவைகளை எல்லாம் எதிர்த்துநிற்கக்கூடிய மனப்பான்மை இந்த நாட்டிலே உருவாவதற்குக் காரணமாக இருந்தது வேதனைப்பட்ட பார்ப்பனர் அல்லாதாருக்காக முதல் குரல் கொடுத்தார்கள் நீதிக்கட்சித் தலை வர்கள். டாக்டர் நடேசனார் குரல், தியாகராயர் குரல், அந்த நாள்களிலே நான்கு பேர் சேர்ந்து இந்த உணர்வுகளை எழுப்ப முடியாத சூழல் இருந்த பொழுது டாக்டர் நடேசனார்தான் பல முறை எண்ணிப் பார்த்து அவர் நடத்திய பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கான விடுதி-திராவிட மாணவர் விடுதியை ஆரம்பித்தார். அந்த விடுதியிலே எட்டு பிள்ளைகளோ, பத்து பிள்ளைகளோ, இலவசமாக தங்க வைத்து உணவு வழங்கி படிக்க வைத்தார்.


பிராமண விடுதிகளில் உணவு வழங்கவில்லை...


அதற்கு இரண்டு காரணம். ஒன்று அவர் காலத்தில் 1912-அதற்குப் பின்னரும் கூட சென்னையில் உள்ள பிராமணர்களின் உணவு விடுதிகளில் எந்த பிராமணர் அல்லாதாருக்கும் சாப்பாடோ உணவோ தருவது கிடையாது. அவர்களுக்கென்று விடுதிகளும் கிடையாது. மாநில கல்லூரியில் படித்தாலும், வேறு எந்தக் கல்லூரியில் படித்தாலும் விடுதியும் கிடையாது.


பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதியில் உணவு கிடையாது. ஆகவே அவர்களுக்கு உணவு வழங்கி அவர்களைப் படிக்க வைப்பதற்காக டாக்டர் நடேசனார் திராவிட மாணவர் விடுதியை நடத்தினார்.


ஆர்.கே.சண்முகம் செட்டியாரை அழைத்தார்


அப்படி நடத்தியபொழுது முதல் ஆண்டு விழாவுக்கோ, இரண்டாவது ஆண்டு விழாவுக்கோ அப்பொழுது படித்து பட்டம் பெற்ற சர்.ஆர். கே.சண்முகம் செட்டியாரை அழைத்து, (அப்பொழுது சர் இல்லை, ஆர்.கே. சண்முகம் தான்). நிகழ்ச்சியில் பேசச் சொன்னார்.


அவர் அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்ட பொழுது டாக்டர் நடேசனாருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏதோ இந்த முறை சண்முகம் செட்டியார் பட்டம் பெற்றிருக்கின்றார் அவரை அழைத்தோம் என்ற எண்ணம் வந்த போதிலும் பின்னர் இப்படி பிள்ளைகளைப் படிக்க வைக்க ஓர் இயக்கம் இருக்க வேண்டும் என்று கருதினார்.


அதற்குத் தகுந்தவர்கள் அப்பொழுது கிடைக்கவில்லை. அப்படியே யாரேனும் ஆதரித்தால் அவர்கள் எல்லாம் வசதி அற்றவர்கள், வழிகாட்ட இயலாதவர்கள்.


கோயில் குளம் வெட்ட எதற்குப் பணம்?


அந்த நிலையிலேதான் டாக்டர் நாயரையும், தியாகராயரையும் சந்தித்து பிராமணர் அல்லாதாருக்காக ஓர் இயக்கம் வேண்டும்; நீங்கள்தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அந்த இரண்டு பேரையும் இணையச்செய்தார்.


மாநகராட்சியிலே தியாகராயர், டி.எம்.நாயர் உறுப்பினர்களாக இருந்தார்கள். திருவல்லிக் கேணி பார்த்தசாரதி குளம் தோண்ட வேண்டும் என்பதற்கு மாநகராட்சி மன்றத்திலே தீர்மானம் போட்டு நிதி ஒதுக்கிய பொழுது டாக்டர் டி.எம்.நாயர் எதிர்த்தார். தியாகராயர் ஆதரித்தார். தியாகராயருடைய பக்தி உணர்வு கோவிலுக்கு குளம் வெட்ட செலவிடலாமே என்பது.


இரண்டுநாள் விவாதம் நடைபெற்றது


டி.எம்.நாயருடைய பகுத்தறிவு உணர்வு கோவிலிலே நிதி இருக்கின்ற பொழுது மாநக ராட்சி பணத்திலே கோயிலுக்கு குளம் வெட்டித் தரத் தேவையில்லை என்றார். இந்த வாதமே இரண்டு நாள், நான்கு நாள்கள் நடைபெற்றி ருக்கிறது. அப்படி இருந்தவர்களை ஒன்றாக இணைத்து திராவிடர்களுடைய நலனுக்காக, பார்ப்பனரல்லாதாருடைய நலனுக்காக குரல் கொடுக்கக் கூடிய நிலையை டாக்டர் நடேசனார் ஏற்படுத்தினார்.


நீதிக்கட்சியின் ஆட்சி


நீதிக்கட்சி மெல்ல மெல்ல பல துறைகளில் தலையிட்டு வந்தது. குறிப்பாக பரிசோதனைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட அன்றைய சென்னை மாகாணத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமை நீதிக்கட்சித் தலைவர்களுக்கு உண்டு. இந்தியாவிலே முஸ்லிம் லீக்கும், நீதிக்கட்சியும்தான் இரட்டை ஆட்சி முறையிலே பங்கு பெற்று அந்தந்த மாநிலங்களிலே நல்லாட்சியை நல்கியது.


அதிலே சிறப்பான ஆட்சி நம்முடைய ஆட்சி. அந்தக் காலத்திலே முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார். அவர் தவறிப்போய்விட்டார்.


பனகல் அரசர் முதலமைச்சர் ஆனார்


பின்னர் அதற்குப் பிறகு ஒரு கட்டத்திலே பனகல் அரசர் முதலமைச்சராக வருகிறார். அந்தக் காலம் ஏறத்தாழ 1923, 24,25 என்று கருதுகின்றேன்.


அவர் முதலமைச்சரே தவிர, மாநிலத்தில் உள்ள எல்லா அதிகாரமும் அவருக்குக் கிடையாது. இந்த நாட்டிலே சில துறைகள்; இந்த நாட்டைச் சார்ந்தவர்களுக்கு-மற்ற துறைகள் வெள்ளைக் காரர்களுக்கே. அந்த நிலையிலே பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தார். அவர் கொண்டு வந்த ஒரு மகத்தான சட்டம்தான் இந்து அறநிலையத் துறை சட்டம். அதற்கு பிராமணர்கள் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.


சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர்


ஆனால், முதலமைச்சர் பனகல் இரண்டு விதத்திலே அவைகளை எல்லாம் சமாளித்தார். அவரோ சமஸ்கிருதத்திலே எம்.ஏ. படித்தவர். எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் பதில் சொன்னார் (கைதட்டல்). பிராமணர்களால் கோயில் சொத்துகள் பல வகையிலே பாதிக்கப்படுகிறது. அந்தச் சொத்தைக் காப்பாற்ற நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்னார். அந்தக் காலத்திலே அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கோபால்சாமி அய்யங்கார். அவர் சென்னை மாகாணத்திலே ஒரு உறுப்பினராக இருந்தார் என்று கருதுகின்றேன்.


அவர் பனகல் அரசரை ஆதரித்துப் பேசக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியதன் விளைவாக முதன் முதலாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


தி.மு.க.வே வெற்றி பெற்றிருக்க முடியாது


அந்த சட்டம் மட்டும் நிறைவேற்றப்படாவிட்டால் இன்றைக்குக் கூட திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால்தான் செல்வாக்கு உள்ளவர்கள் மக்களை ஆட்டிப்படைக்கக் கூடிய நிலை தடுக்கப்பட்டது.




ஆரியர்-திராவிடர் போராட்டம் வரப்போகிற தேர்தலில் எதிரொலிக்கும்
ஆரியர், திராவிடர் போராட்டம் வரப்போகிற தேர்தலில் எதிரொலிக்கும் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தமது உரையில் கூறி விளக்கினார்.

நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் (24.11.2010 ) அன்றையத் தொடர்ச்சி வருமாறு:

முத்தையா முதலியார்

அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு அமைச்சர வையிலே முத்தையா முதலியார் அமைச்சராக இருந்தார். அவர்தான் கம்யூனல் ஜி.ஓ. ஆணையாகப் போட்டார். 1921ஆம் ஆண்டிலேயே பார்ப்பனரல்லா தாருக்குத் தீர்மானம்-அரசு உத்தியோகங்களில் பங்கிட்டுத் தர வேண்டும் என்பது.

எந்த வெள்ளைக்கார அதிகாரியும் நிறைவேற்றித் தரவில்லை. பல இடத்திலே செல்வாக்காக இருந்த பிராமணர்கள் எந்த இடத்தையும் பிரித்துத் தரவில்லை.

கம்யூனல் ஜி.ஓவுக்காக பார்ப்பனரையே பேச வைத்தனர்

வகுப்புவாரி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அதற்குப் பிறகு போராடிப் போராடி நடேச முதலியாரும் வேறு பலரும் போராடி கடைசியாக முத்தையா முதலியார் அமைச்சராக வந்தபொழுது முதல் கம்யூனல் ஜி.ஓ. உத்தரவை வெளியிட்டார்.

எதிர்ப்பெல்லாம் இருந்தது. சில சில அய்யர்களையே பயன்படுத்தி பதில் சொல்லச் சொன்னார்கள். பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அவ்வளவு இடம் இல்லை. பிராமணர்கள் புறக்கணிக்கப்படவில்லை. ஆகவே, கம்யூனல் ஜி.ஓ வை கொண்டு வரலாம் என்று சட்டமன்றத்திலே பார்ப்பனரையே பேச வைத்தார்கள்.

அப்படித்தான் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இவ்வளவு பேர் படித்தவர்களாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய முழு வாய்ப்பு.

அண்ணா வசதியற்ற குடும்பத்திலே பிறந்தாலும்....

இல்லையானால் நானே கூட எம்.ஏ. வரை படிக்கக்கூடிய வாய்ப்பு, அந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டிருக்காது. பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட ஏழையாக இருந்து வசதியற்ற குடும்பத்திலே பிறந்து அவர் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் படிப்பதற்குப் போதுமான வசதி இல்லாத காரணத்தால் இரண்டாண்டு, மூன்றாண்டு இடைவெளிவிட்டு 1934ஆம் ஆண்டுதான் அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

எனவே, அப்படி பல சிக்கல்கள் வரக்கூடிய நிலைதான் நம்முடைய குடும்பங்களிலே இருக்கிறது. ஆனால், ஓர் அடிப்படை உண்மையை நான் சொல்ல விரும்புகிறேன். வெள்ளைக்காரன் வெளியேற வேண்டும் என்பதும், நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதும் யாரும் மறுக்க முடியாத கொள்கை.

வெள்ளைக்காரனால் நாம் வாழ்ந்தோம்

ஆனால், வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கு வந்த காரணத்தால்தான் நாமெல்லாம் வாழ்ந்தோம். வெள்ளைக்காரன் நம்மை ஆட்சி செய்தான். ஆனால், அடிமைக்குக் காட்டுகிற பரிவை அவன் காட்டினான். அடிமைக்கு பரிவைக் காட்டதவன் ஆரியன். ஆரியன் நம்மை அடிமைப்படுத்தினான்; கொடுமைப்படுத்தினான்.

எண்ணாயிரம் என்ற இடத்திலே....

ஆங்கிலேயன் அடிமையைப் பரிவோடு நடத்தினான். இன்னும் சொல்லப்போனால் அன்றைக்கு அந்த வெள்ளைக்கார அதிகாரிகளிட மிருந்து சமையலுக்காக அவர்களிடத்திலே வேலை பார்த்தவர்கள்தான், ஆதிதிராவிட சமுதாயத்திலே முதன்முதலாகப் படித்து வாய்ப்பு பெற்றவர்கள். அந்த ஆங்கிலேயர் ஆட்சி இருந்த காரணத்தால் தான் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் படிப்பதற்கு உரிமை இல்லை என்ற நிலைமை நீக்கப்பட்டிருக்காது. அந்த அடிமை சாசனம் முறியடிக்கப்பட்டிருக்காது. ராஜராஜ சோழன் காலத்திலே எண்ணாயிரம் என்ற இடத்திலே மிகப்பெரிய கல்வி நிலையம், வேதபாடசாலை. 300 பேர் 400 பேர் படித்தார்கள். படிக்கிற பிராமணப் பிள்ளைகளுக்கெல்லாம் உணவு, உடை, எண்ணெய் தேய்த்து கொள்வதற்கு எண்ணெய், மற்றும் அதற்கான பொருளும் குளிப்பதற்கு வசதி இவை எல்லாம் வழங்கினார்கள். அந்த ஆசிரியர்களுக்கு மாதம் 5 பவுன், 4 பவுன், மூன்று பவுன் என்று சம்பளம்.

வேத பாட சாலையில் சத்தம் கேட்கும்

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு பிராணமர்கள் மட்டும் படிப்பதற்கு பெரிய பெரிய பாட சாலைகள். மயிலாடுதுறையிலே நான் சிறு பிள்ளையாக படித்தபொழுது அங்கு உள்ள பட்டமங்கலத்தில் இரண்டு, மூன்று பெரிய கட்டடங்கள் எல்லாம் வேத பாட சாலை.

காலையிலே என்னுடைய தந்தையார் கடை திறக்கச் செல்கிற பொழுது நான் உடன் செல்வேன். அப்பொழுது அந்த வேத பாடசாலையிலே ஓதுகின்ற சத்தம் கேட்கும்.முனிசிபல் ஹைஸ்கூல் திறக்கப்படுகிறவரையில் வேத பாடசாலை சத்தம்தான். அத்தனையும் பிராமணர்கள்தான். இன்னும் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பிராமணர்கள் சாப்பிடுகின்ற இலையைத்தான்-ஏழை எளிய மக்கள்-அந்த எச்சில் இலையில் உள்ள உணவுகளை எடுத்து உண்பார்கள்.

கண்ணாரப் பார்த்திருக்கிறேன்

அதைக் கண்ணாரப் பார்த்திருக்கின்றேன். பிராமணர்களுக்கு இருந்த வசதிக்காக நான் சொல்லவில்லை. பிராமணர்கள் மட்டும்தான் படிக்கலாம். வேடிக்கை என்னவென்றால், மனுதர்மம் மனுதர்மம் என்று சொல்லுகின்றோமே, அந்த மனுதர்மம்-ஆரிய இனத்தைத் தவிர மற்ற இனத்தை அழிப்பதற்காகத் தீட்டப்பட்ட சதித்திட்டம் (கைதட்டல்).

திருப்திப்படுத்துவதற்காக பட்டம்

அந்த மனுதர்மத்திலே பிராமணர் அல்லாதாரை சூத்திரர் என்று சொல்ல நம்முடைய தலைவரோ, மற்றவர்களோ பேசுவதை சொன்னதைப் போல தியாகராய செட்டியார் எல்லாம் அவர்கள் வைசியர் என்றோ, சில பட்டப்பெயர்களுக்கு உரியவராக இருந்தால் கூட, அவருடைய அகராதியிலே இந்தப் பட்டங்கள் எல்லாம் சூத்திரர்களுக்கு வழங்கி அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக வழங்கப்பட்டதே தவிர, இவர்களை மேல்ஜாதியாக ஏற்றுக்கொள் வதற்காக அல்ல.

சற்சூத்திரர் என்று ஒரு பட்டம். சூத்திரர்களிலேயே கொஞ்சம் பணம் வசதி இருந்து, பிராமணர்களை அழைத்து சடங்கு சம்பிரதாயங்கள் செய்வார்கள். அவர்களை சற் சூத்திரர்கள் என்று ஆக்குவார்கள்.

அவர்கள் கையில் ஆதிக்கம்

அதற்கு என்ன அர்த்தம் என்று நாங்கள் பல காலம் பேசியிருக்கின்றோம். சூத்திரன் என்றால், இன்னாருடைய மகன் சற்சூத்திரன் என்றால் சுத்தமாக இன்னாருடைய மகன் (கைதட்டல்). ஆக, அந்தப்பட்டப் பெயர் வழங்கக்கூடிய அளவுக்கு நிலைமை எதனாலே வந்தது. அவர்கள் கையில் ஆதிக்கம் இருந்தது. எல்லாம் அவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் அவர்கள்தான் வக்கீல், அவர்கள்தான் டாக்டர், அவர்கள்தான் எம்.எல்.ஏக்கள், அவர்கள்தான் அமைச்சர்கள் என்று காலம் போய் இப்பொழுது ஒரு பார்ப்பன அமைச்சர் கூட கிடையாது. (கைதட்டல்).

ஒரு அமைச்சர் கூட அவர்கள் இல்லை. இருந்தாலும் எல்லா அமைச்சர்களையும் வீழ்த்தக்கூடிய ஆற்றல் அவர்களிடத்திலே இருந்தது.

ஏதோ இந்தப் பதவிகளுக்கு வருகிறோமே தவிர, இன்னும் இனம் தலைநிமிரவில்லை. இனஉணர்வு இன்னும் ஏற்படவில்லை. நாம் வேண்டுமானால் ஏதோ கூடியிருக்கிறோம்.

வீரமணியின் செல்வாக்கால்.....

வீரமணியின் செல்வாக்கால் கூடியிருக்கிறோம், அல்லது இந்த மண்டபத்துக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது; அதற்காகக் கூடியிருக்கிறோம். அல்லது விளம்பரம் பெற்ற பேச்சாளர்கள் சில பேர் இருக்கிறோம்; அதற்காகக் கூடியிருக்கிறோம். ஆனால், திராவிடராக இன்னும் கூடவில்லை.

உண்மையான திராவிடன் என்றைக்கும் ஆரியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டான். (கைதட்டல்).

ஆரியக் கலாச்சாரம் வீழ்த்தியது

அந்த ஆரியக் கலாச்சாரம் எந்த அளவுக்கு நம்மை வீழ்த்தியது என்றால், சுயமரியாதை இயக்கம் தொடங்கி தந்தை பெரியாருடைய தலைமையிலே சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்ட, தம்பதிகள், இரண்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள்-இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணவனும், மனைவியுமாக வாழ்க்கை நடத்தி பின்னர் அவர்கள் இறந்துபோகிற பொழுது, தந்தையின் சொத்துக்கு பிள்ளை உரிமை கொண்டாடி வழக்குப் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனென்றால், அவர் இரண்டு திருமணம் செய்தவர். அந்த வழக்குப் போட்டபொழுது நீதிமன்றத்திலே, உங்களுக்கு எப்பொழுது திருமணம் ஆயிற்று? நீங்கள் சாஸ்திரப்படி திருமணம் செய்துகொண்டீர்களா? என்று கேட்டபொழுது, நாங்கள் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்று சொன்னார்கள். அவருடைய பெயரை எல்லாம் நான் மறந்து விடுவேன்.

உயர்நீதிமன்றத்திலே சொன்ன பதில்-நீங்கள் செய்துகொண்ட திருமணம் செல்லாது-விவாகம் செல்லாது; நீங்கள் சாஸ்திரப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை; ஓமம் வளர்க்கவில்லை; அக்னியை சுற்றிவரவில்லை; மந்திரம் சொல்லவில்லை.

திருமணம் செல்லாது

அதுவும் இந்து தர்மப்படி உங்களுடைய திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியது. அப்படி செல்லாது என்று சொன்னதற்கு என்ன காரண மென்றால், மனுதர்மத்திலே இன்னின்ன சடங்குகள் செய்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரு விதி.

இன்னொருவிதி-அந்தந்த ஜாதிக்கிடையிலேதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது. மூன்றாவது விதி- எந்தக் காரணத்தாலும் மேல் ஜாதிக்காரனாக இருக்கிற ஆடவன் பிராமணன், மற்ற ஜாதிப்பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது பிராமணனுக்கு அடுத்த சத்திரியன் தனக்குக் கீழே இருக்கின்ற சமூகப் பெண்களை திருமணம்செய்து கொள்ளலாம். கீழ்ஜாதி ஆடவன் மேல் ஜாதிப் பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாது; சாஸ்திரம் அனுமதிக்காது.

சாஸ்திரம் என்றால் கேட்டு வாசற்படி மாதிரி. அது சிலபேரைத்தான் உள்ளே விடும். சில பேரை உள்ளே விடாது.

அதற்கு மேலே அடுத்து சூத்திரர்கள். அவர்க ளுடைய சமூகத்திலேயே திருமணம்செய்து கொண்டால் கூட, திருமணம் ஆகாது-விவாகம் ஆகாது. ஏன் விவாகம் ஆகாது என்று கேட்டால், சூத்திரர்களுக்குத் திருமண உரிமையே கிடையாது.

சூத்திரர்களை எல்லாம் தாசி மக்கள், அடிமைகள், போரில் பிடிக்கப்பட்டவர்கள் என்கின்ற அடிப்படிப்பட்ட வாய்பாட்டில் என்றைக்கும் தகுதி அற்றவர்கள். ஆகவே, அவர்களுடைய திருமணமே செல்லாது. அது அவர்களுடைய சாஸ்திரம்.

சூத்திரன் ஆட்சி நடத்துகின்ற நாட்டில்....

அந்த அடிப்படையில்தான் சூத்திரன் ஆட்சி நடத்துகின்ற ராஜ்யத்தில் குடியிருக்கவே கூடாது. ஆக, சூத்திரனை ஆட்சி நடத்தவிடக்கூடாது. நீ குடியிருக்க வேண்டுமா? ஆகவே, அவனை ஆட்சி நடத்தவிடாதே-இந்தத் தேர்தலில் கூட அது மறைமுகமாக ஒலிக்கும் என்று கருதுகின்றேன். (கைதட்டல்).

ஆக, இந்த நாட்டு மக்கள் மனித உரிமை பெற முடியாமல் தடுக்கப்பட்டார்கள். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோயபெல்ஸ் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னாலே ஒரு தத்துவவாதி சொன்னான்: ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்து மக்களை அழித்தால் போதாது; அந்த இனத்து மக்களுடைய நாகரிகத்தை அழித்தால் போதாது; அந்த இன மக்களுடைய மொழி அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்று சொன்னான்.

அதே போல டிவெல்ரா சொன்னார்-அயர்லாந்து நாட்டை விடுவிப்பதற்காக அந்த மாவீரன் சொன்னான்: என் நாட்டை இழந்தாலும் இழப்பேன். என் மொழியை ஒரு நாளும் இழக்க மாட்டேன் என்று சொன்னான். என் மொழியை இழக்காவிட்டால் மறுபடியும் என்னுடைய மக்கள் தலையெடுத்து நாட்டைக் கைப்பற்றிக்கொள்ள முடியும்.

மொழியை அழித்துவிட்டால்.....

என்மொழியை அழித்துவிட்டால் யார் அய்ரிஷ் மக்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே, என்னுடைய மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னான். ஆரியம் இந்தியாவிலே எந்த மொழியும் தனித்து வளருவதற்கு அனுமதிக்கவில்லை.



என்னதான் அரசியல் வாழ்வு கிடைத்தாலும் இனஉரிமையை மறந்துவிடக்கூடாது


என்னதான் அரசியல் வாழ்வு கிடைத்தாலும் இன உரிமையை மறந்துவிடக் கூடாது என்று தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் விளக்கவுரையாற்றினார்.


நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


தமிழ்மொழியை அழிக்க 150 ஆண்டுகால முயற்சி


ஆரிய மொழி கலாச்சாரத்தை எல்லா மொழி யிலும் புகுத்தினார்கள். தமிழ் போல தனித்து பாரம்பரியமாக வளர்ந்த அந்த மொழியைக் கூட அழிக்க முயற்சித்தார்கள்.


மணிப்பிரவாள நடை என்று இடைக்காலத்தில் தமிழ்மொழியை சிதைப்பதற்கே 150 ஆண்டுகாலம் நடவடிக்கை எடுத்தார்கள். நல்ல தமிழ் எது என்று கேட்டால் வடமொழி நிறைவாக கலந்து எழுதுகின்ற தமிழ்தான் நல்ல தமிழ் என்றார்கள்.


இந்தியாவிலே உள்ள எல்லா மொழிக்கும் சமஸ்கிருதம் கடன் கொடுத்திருக்கின்ற காரணத் தால் சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழி. மற்ற மொழி எல்லாம் தாழ்ந்த மொழி. அந்த இலக்கணம் தமிழுக்குப் பொருந்தாது என்று சொன்னாலும் கூட, தமிழ் அந்த இலக்கணத்திற்கு உரியதாக அவர் களாலே கருத்தப்பட்டது.


வெள்ளைக்காரன் வந்ததால்....


நல்ல வேளை வெள்ளைக்காரன் வந்தான். நல்ல வேளை கிறிஸ்துவ மதம் வந்தது. நல்ல வேளை டாக்டர் கால்டுவெல் வந்தார். நல்ல வேளை ஜி.யு.போப் வந்தார். இன்னும் சொல்லப்போனால் அவர்களைப் போன்ற பல அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள்-தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்-வடக்கே வந்தவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு ஆய்வு நடத்தினார்கள்.


தெற்கே வந்தவர்கள்-தமிழகத்திற்கு வந்தவர்கள் தமிழிலே ஆய்வு நடத்தினார்கள். தமிழ் மொழி யினுடைய தனித்தன்மையை உணர்ந்தார்கள். உணர்ந்து போற்ற ஆரம்பித்தார்கள். பாராட்டி னார்கள்.


தமிழர்களையும் ஓர் இனம் என்று சொன்னார்கள்


தமிழர்களையும் ஒரு நாகரிகத்தினுடைய இனம் என்று சொன்னார்கள். ஒரு இனம் என்ற தகுதியே வந்த காரணத்தால்-வெள்ளைக்காரனோ அவனைச் சேர்ந்தவனோ வந்த காரணத்தால் கிடைத்ததே தவிர, இல்லையானால் ஆரிய கலாச்சாரம் மட்டும் இருந்திருக்குமானால், அந்நிய ஆட்சி வராமல் இருந்திருக்குமேயானால் நம்முடைய இனம் தலை எடுத்திருக்க முடியாது.


இனம் இருந்திருக்கலாம் அடையாளம் தெரி யாமல் அடிமைப்பட்ட இனமாக, ஒடுக்கப்பட்ட இனமாக , ஓரங்கட்டப்பட்ட இனமாக, கூலி வேலை செய்கிற பட்டாளமாக நாம் இருந்திருப்போமே தவிர, இவ்வளவு துணைவேந்தர்களையும் பார்க்க முடியாது (கைதட்டல்); அமைச்சர்களைக் காண முடியாது.


கருணாநிதியே பிறந்திருக்கமாட்டார்


ஆட்சியிலே நாம் இருக்கவே முடியாது. கருணாநிதி என்ற ஒரு மனிதனே பிறந்திருக்க மாட்டார் (கைதட்டல்). அந்த அளவுக்கு இந்த நாட்டிலே ஒரு நிலை. அந்த ஆரியக் கலாச் சாரத்தினுடைய விளைவை இன்னொரு வகையிலே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


பரிதிமாற் கலைஞர் யார்?


ஒன்றிரண்டு பிராமணர்கள் தமிழ்மொழியிலே பற்று வைத்து, தொண்டு செய்திருப்பது உண்மைதான். பெரியார் தமிழைப் பாராட்டாமலா இருந்தார்? பரிதிமாற் கலைஞர் பாராட்ட வில்லையா? அந்த பிராமணர்கள் ஆரியக் கலாச்சாரம்தான் உயர்ந்தது என்ற எண்ணத்திற்கு ஆட்படாதவர்கள்.


அதுதான் உயர்ந்தது என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருந்தால் தமிழைப் போற்றியிருக்க மாட்டார்கள். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று சொல்லியிருப்பாரா? (கைதட்டல்).


பார்ப்பனரை அய்யர் என்ற காலமும் போச்சே


பார்ப்பனரை அய்யர் என்ற காலமும் போச்சே என்று சொல்லியிருப்பாரா? ஆனால், அவர்களும் கூட ஆங்கிலம் வந்த காரணத்தால்தான் இந்தத் தெளிவைப் பெற்றவர்கள். ஆங்கிலமே இல்லை என்றால் பாரதியாருக்கு அந்தத் தெளிவு வந்திருக்குமா? கால்டுவெல் இலக்கணம் இல்லாவிட்டால பரிதிமாற் கலைஞர் இப்படி வாதாடியிருப்பாரா? இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலம் இந்த நாட்டிற்கு வரக்கூடிய வாய்ப்பை நாம் பெற்ற காரணத்தால் பி.டி.சீனிவாச அய்யங்கார் தொல் தமிழருடைய வரலாற்றை எழுதினார். Pre Aryan Tamil Culture என்ற புத்தகத்தை எழுதினார்.


பிராமணர்கள் மாறி .......


அப்படி எவ்வளவோ மாற்றங்களுக்கு பிராமணர்கள் மாறி நமக்கு ஆதரவாகவோ நடு நிலையாகவோ பல கருத்துகளைச் சொன்னவர்கள். உண்டென்றால் ஆங்கிலத்தினுடைய செல்வாக்கு கூடும். (கைதட்டல்).


அரசியல் வாழ்வு கிடைத்தாலும் இன உரிமையை மறந்துவிடக்கூடாது


நாம் இந்த வாய்ப்பைப் பெற்றோம் என்றால் ஆங்கிலேயர்களால் வந்த வாய்ப்பு. ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் நம்முடைய நிலை மிகத் தாழ்ந்து போயிருக்கும். அந்த நிலையை மாற்றுவதற்கு நீதிக்கட்சிதான் முதல் குரல் கொடுத்த கட்சி என்ற முறையிலேயும், அந்த வழியில் திராவிடர் கழகம், அந்த வழியிலே திராவிட முன்னேற்றக் கழகம் அந்த வழியிலே பெரியார், அண்ணா; அந்த வழியிலே இன்றைக்கு நாம் தொடர்ந்து நடைபோடுகிறோம் என்பதையும் நான் நினைவூட்டி என்னதான் அரசியல் வாழ்வு கிடைத்தாலும். இன உரிமையை மறந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் நீதிக்கட்சி என்பதை நினைவூட்டி (பலத்த கைதட்டல்) என் உரையை நான் நிறைவுசெய்கிறேன், வணக்கம்.


-இவ்வாறு நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

 நற்றி 
தமிழ் ஓவியா



நேர்காணல்

 

”தேசிய கட்சியின் நலனை மறந்தவர்கள் தனிவழி தேடுவர்” என திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும் தமிழக நிதியமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் கூறியுள்ளார்.  60 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அண்ணா தலைமையில் 1949-ம் ஆண்டு தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.
33 ஆண்டுகளாக தி.மு.க. பொதுச்செயலாளராக கலைஞரின் கட்சிப்பணி என்கிற சுமையை பகிர்ந்து வருகிறார்.  தனித்தமிழ் ஆர்வத்தால் ராமையா என்கிற தன் இயற்பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டவர். அவர் பேட்டி:
கேள்வி: முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தல் களத்தில் வேலைகளை தொடங்கிவிட்டது. தி.மு.க. தயாராகிவிட்டதா?
தி.மு.க எபோழுதும், எந்த நேரத்திலும் தேர்தலில் ஈடுபடக் கூடியதாகவே செயல்பட்டு வருகிறது. அது நாளும் இயங்கிக் கொண்டுள்ளதால் தேர்தல் பணியையும் அதே போக்கில் அது மேற்கொள்ளும். தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தலுக்கான சில சடங்குகள்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவுங்கூட அமைப்பு ரீதியாக இயங்கும் கழகத்திற்கு கடினமானதல்ல.
ஆனால் நீண்ட ஓய்விலோ, செயலற்ற நிலையிலோ, உறக்கத்தில் இருக்கக் கூடிய கட்சி, தேர்தல் வேலையைத் தொடங்கும்போது தான் அது காண்பவருக்கு வேகமான செயல்போலத் தெரியும். ஓட்டப் பந்தயம் போன்ற தேர்தலில் ஈடுபடும் எவரும், புறப்பட்டவுடன் திடீரென்று வேகமாக ஓடிவிட முடியாது.
எந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், அந்தக் கட்சி ஆட்சியினை மக்கள் வெறுப்பதற்கோ, அன்றி அதை எதிர்க்கும் கட்சித் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கோ, போதுமான காரணம் இருந்தால்தான் ஆட்சி மாற்றம் நிகழும். மக்கள் ஒரு ஆட்சியை வெறுத்தால்தான் மாற்றம் வரும்.
அந்த வகையில் தி.மு.கழக ஆட்சியில் கலைஞர் நிறைவேற்றியுள்ள சாதனைகள், தமிழ்நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் ஏதேனும் ஒருவகையில் தொட்டிருக்கிறது. அரிசிச் சோறு சாப்பிடுவோர் எவரும், ஆடை உடுத்துவோர் அனைவரும், வாழும் ஆசை கொண்டோரும், மக்களைப் பெற்றோரும் ஆகிய எல்லோரும் இந்த அரசுசெய்துவரும் சமூகநலத் திட்டங்கள் பலவும் தொடர்ந்திட வேண்டும் என்றுதான் விரும்புவர். அப்படித் தொடரச் செய்வதற்கு, யார் இன்று ஆள்கின்றார்களோ அவர்கள் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தான் விரும்புவர்.
எதிர்த்து நிற்கும் கட்சியின் கடந்த கால சாதனை எப்படிப்பட்டது என்பதையும் மக்கள் மறந்துவிடமாட்டார்கள். நினைவு ஆற்றல் இழக்காத எவரும், அந்த ஆட்சியில் நடைபெற்ற அராஜக, சட்டவிரோத நடவடிக்கைகளை மறந்திருக்க மாட்டார்கள். நினைத்தாலும், கனவிலே கண்டாலுங்கூட கதிகலங்கச் செய்யும் அப்படிப்பட்ட தலைமையை ஆதரித்திடும் அளவு, மனங்குழம்பியோராக இல்லை மக்கள்.
கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பில் அடிக்கடி கூட்டணி குறித்த எதிர்ப்புக் குரல்களை கேட்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடருமா?
வெளியில் பொதுக்கூட்டத்தில் கேட்கும் எதிர்ப்புக் குரலோ அல்லது அறைகூவலோ எதுவாயினும், அந்தக் கட்சியில் அவர்கள் இருப்பதை மேலிடம் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான். வேறு நோக்கமெனில், தங்களுடைய கட்சிக்குள், தங்கள் தேசியக் கட்சியின் ஒட்டுமொத்த நலனை மறந்தவர்கள்தான்… தனி வழி தேடுவார்கள். சிலருக்கு அதுவே அவர்தம் பாரம்பரிய மரபுரிமையாகவும் இருக்கலாம்.
கேள்வி: அரசியல் என்பது வியாபாரம் தான் என்றும், பெரிய கட்சிகள்தான் அரசியலை வியாபாரம் ஆக்கியது என்றும் குற்றம் சாட்டுகிறார் டாக்டர் ராமதாஸ். இதை நீங்கள் ஏற்கிறீர்களா?
அரசியலில் வியாபாரமும் இருக்கலாம். அரசியல் முழுவதுமே வியாபாரம் அல்ல. அப்படி நடத்தினால் அது நீடிக்காது. பெரிய கட்சிகள் வியாபாரம் ஆக்கி இருந்தால் அப்படிப்பட்ட கடும் குற்றம் செய்த கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டார் டாக்டர் ராமதாசு என்று கருதுகிறேன். ஒருவேளை அவர் கூட்டு சேர்ந்தால், இது எப்படி? வியாபாரம் ஆகாதா, என்று எவராவது கேட்டால், இது சில்லரை வியாபாரம் என்றும் அவர் கூறலாம்.
கேள்வி: அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் கலைஞர் என்கிறாரே ராமதாஸ்?
கலைஞர், அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக ஒப்புக்கொண்டு கொடுத்த கடிதத்தின்படி, அந்த நாள், இன்னும் வரவில்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், யாரும் நம்பிக்கை துரோகம் செய்ய இடமில்லாமல் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் வருகிற ராஜ்யசபா இடந்தான் அவருக்குத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பதவி எதையும் எங்கள் குடும்பத்தில் உள்ள எவரும், எப்போதுமே ஏற்கமாட்டோம் என்பது உறுதி; தவறினால் எங்கேயோ நிறுத்தி, எதனாலோ, எவர் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றவருக்கு, இது எப்படி ஏமாற்றம் ஆகலாம்?
கேள்வி: பொதுவாக இன்றைக்கு கொள்கைப் பிடிப்போடு அரசியலுக்கு வருபவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனரே, ஏன்?
இன்று திராவிடர் கழகம் போன்று அரசியலில் ஈடுபடாதா இயக்கத்தைத் தவிர்த்து, கட்சி எதுவானாலும் அரசியலில் பங்கேற்க வேண்டிய நிலையே உள்ளது. அரசியல் என்பது கட்சிகளின் போட்டி அடிப்படையிலான அரசியலாகவும், அது ஒன்றை ஒன்று வெல்லவும், வீழ்த்தவும் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் உள்ளதால் தனிப்பட்டதொரு இயக்கத்தின் மூலக்கொள்கை உணர்வு ஏற்படுத்தும் நோக்கம் முக்கியத்துவம் பெறவில்லை.
சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, ஆட்சி அமைப்பில் மகளிருக்கு உரிய இடம், சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியினர் இடம்பொறும் வாய்ப்பு ஆகியவையே இளைஞர்களின் கவனத்தில் இடம்பெறுகின்றன. இதுவும் அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவானதொரு நிலையே.
ஜனநாயக நடைமுறையில், உள்ளாட்சி மன்றங்களிலோ, நாடாளும் அமைப்புகளிலோ, பல்லாயிரம் பேர் பதவிகளில் உள்ளதைக் காணும் இளைஞர்கள், அந்தப் பதவிகளை அடைவதுதான் அரசியலில் பங்கேற்கும் வாயில் என்று மயங்குகின்றனர்.
பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் தனது ஆசிரியரைப் பார்த்து, அவரைப் போல தானும் ஓர் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதை ஒத்ததே அது. என்றாலும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை முன் எடுத்துச் செல்லும் வாய்ப்பும், தேவையும் குறைகின்றது. இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்கவிழா உரை

கடவுள் இல்லை! குடி குடியைக் கெடுக்கும்! திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்கவிழா!

தமிழர் உரிமைக்காகவும் நலனுக்காகவும் ஓங்கிக் குரல்கொடுக்கப் புதிய இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. பேராசிரியர் சுப.வீயைத் தலைவராகக் கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தொடக்க விழா ஜனவரி 22-ஆம் நாள் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்தப் பேரவையைத் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இளைஞர்கள் நிறைந் திருந்த அந்த அரங்கம், தமிழின எதிர் காலத்தின்மீதான நம்பிக்கையை அதிகப்படுத் தியது. இன உணர்வு மிகுந்திருந்த அந்த விழாவிலிருந்து...

பேராசிரியர் அன்பழகன்
தமிழ் மொழியை முழு அளவில் நற்றமிழாகக் காப்பாற்ற, இன உணர்வைப் பெருக்க இந்தப் பேரவைப் பெரியஅளவிலே பயன்படும் என நான் நம்புகிறேன். உண்மை யாகவே அரசியலில் பல கடமைகளை ஆற்ற வேண்டியிருக்கிறது. அந்தக் கடமைகளை ஆற்றவேண்டியபோது சமுதாயக் கடமை யிலே ஏற்படுத்த வேண்டிய ஆழமான உள் உணர்வுகளை ஏற்படுத்த முடியவில்லை. சமுதாயத்திலே ஏற்பட வேண்டிய முதல் கருத்து, ஜாதி ஒழிக்கப்படவேண்டும். என் னுடைய மனத்திலே ஜாதி உணர்வு இருக்குமானால் அந்த உணர்வு ஒழிக்கப் படவேண்டும். அடுத்தவனுடைய ஜாதியை ஒழிப்பதினாலே ஜாதி ஒழிந்துவிடாது. எல்லோரும் ஓர் குலம் என்கிற பரந்த மனப்பான்மை, ஜாதி என்ற சொல்லே தமிழுக்குரியதல்ல என்று வெறுக்கின்ற அந்த நோக்கம் இவையெல்லாம் சேர்ந்து நாம் திராவிட உணர்வுள்ள தமிழர்கள் என்பதை வலியுறுத்தத்தான் இந்தத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை என நான் உளமாரக் கருதுகிறேன்.

பெரியாரை உணர்ந்தேன், பெரியாரைப் பேசுகிறேன். - பேராசிரியரின் நுட்பமான உரை

தந்தைபெரியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் 31.3.2010 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:
பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் இங்கே அமைக்கப்பட்டிருக்கிற அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு இந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக என்னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறக்கட்டளை நிகழ்ச்சியினுடைய தலைவராக வீற்றிருக்கிற என்னுடைய அன்புக்குரிய திராவிடர் கழகத் தலைவர், “விடுதலை” ஏட்டினுடைய ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே! சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய மதிப்பிற்குரிய பதிவாளர் அவர்களே!
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அரசு அவர்களே! இங்கே கலந்து கொண்டிருக்கின்ற பேராசிரியப் பெருமக்களே! திராவிடர் கழக முன்னோடிகளாக இருக்கக்கூடிய என்னுடைய அருமை நண்பர்களே! மாணவிகளே! மாணவர்களே! தோழர்களே! தந்தை பெரியாருடைய பெயரால் இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதில் இரண்டாவது சொற்பொழிவாக நான் உரையாற்றுகிற ஒரு வாய்ப்பை வழங்கிய என்னுடைய அன்பிற்குரிய மானமிகு வீரமணி அவர்களுக்கும், அதே போல பேராசிரியர் அரசு அவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியாரைப் பற்றிப் பேசுவதென்றால் வேறு ஏதாவது ஒரு தலைப்பாக இருந்தால் நான் மிக வேகமாகப் பேச முடியும். பெரியாரைப் பற்றிப் பேசுவதென்றால் சாதாரணமாகப் பல்வேறு எண்ண ஓட்டங்கள், குறுக்கிடுகிற காரணத்தால் ஒரு வகையில் நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, என் உணர்ச்சி என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.
நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்று சொன்னால் என்னைப் பற்றிப் பதிவாளர் பாராட்டிப் பேசியதோ, யாரோ ஒரு பதிவாளர், பேராசிரியர் அன்பழகனை இப்படிப் பாராட்டிப் பேசுகிறார் என்றால், இவ்வளவு பெரிய இடமோ வாய்ப்போ எனக்குக் கிடைத்தது என்று சொன்னால், வேறு எந்த வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வளவும் தந்தை பெரியாரால்தான் எனக்குக் கிடைத்த பேறு என்று கருதுகின்றவன். (கைதட்டல்).
பெரியாரை நான் உணர்ந்ததால்.... பெரியாரை நான் உணர்ந்ததால், அவரைப் பின்பற்றியதால், அவருடைய எண்ணம் என்னுடைய மனதிலேயும் பதிந்ததால், அந்த எண்ணம் என்னையும் உருவாக்கிய காரணத்தால் உங்கள் முன்னால் நிற்கின்றேன். தந்தை பெரியாருடைய எண்ணங்கள் தான் என்னை உருவாக்கியது; மேடையிலே ஏற்றியது; பாராட்டுகிற மனப்பான்மையைத் தந்தது. ஏதோ சமுதாயத்துக்கு நானும் தொண்டாற்றுவதாக மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றேன். நான் பெரியார் அவர்களை ஆறேழு வயதிலேயே பார்த்தவன்.
என் தாய்மாமன் மாயூரம் நடராசன் பார்த்தவன் என்றால் - புரிந்து கொண்டு பார்த்தவன்  என்று பொருள் அல்ல. வியப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கின்ற குழந்தை. என்னுடைய தாய்மாமன் யார் என்றால், என்னுடைய தந்தையின் அத்தை மகன் தான் மாயூரம் நடராசன், அவருடைய தந்தை சிதம்பர நாதன். நான் இவற்றை எல்லாம் பேசுவது-நினைவு வந்துவிட்டதால் தவிர்க்க முடியாமல் பேசுகிறேன். சிதம்பரநாதன் அவர்களே தமிழ்ப்பற்று உடையவர். மாயவரம் நடராசன் என்னுடைய தந்தையாரை விட ஓர் எட்டு வயது, பத்து வயது இளைஞர். என்னுடைய தந்தை யார் இருக்கும் பொழுது அவர்களும் உடன் இருப்பார்.
சிறுவனான நிலையில் பெரியாரைப் பார்த்தேன் அய்யா அவர்கள் சாப்பிடுகிற நேரத்திலே இருந்த பொழுது, தந்தை பெரியாரைப் பார்ப்பதற்கு என்னை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது, நான் என்னுடைய மாமா வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிறுவனாக தந்தை பெரியாரைப் பார்த்தேன். அதற்குப் பிறகு மாயூரத்திலே கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையிலே காவிரி ஆற்றிலே அய்ப்பசி மாதம் துலாக் கட்டம். அங்குவைதிக நிகழ்ச்சியாக பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும்.
சிறு மேஜை அரிக்கேன் விளக்கு அந்தக் காவிரி ஆற்றங்கரை மணலிலே தான் பெரியார் பேசுவார். ஒரு சிறு மேஜை இரண்டு அரிக்கேன் விளக்குகள் இருக்கும். பெட்ரோமேக்ஸ் விளக்கு அல்ல. அய்யா அவர்கள் பெரிய காவித்துப்பட்டா ஒன்றை மேலே போட்டுக் கொண்டு மேசையைப் பிடித்துக் கொண்டு பேசுவார். அவர் நிற்கக் கூடிய அளவுக்கு வல்லமை உள்ள காலம்; வலிமை குறையாத காலம். தெம்பாக நின்றுகொண்டு தன்னால் முடிந்த வரையில் உரத்துப் பேசுகிறார்.
அப்படிப் பேசுகிற பொழுது அவருடைய பேச்சைக் கேட்பதற்கு நூறு பேர் திரண்டிருப்பார்கள். வேறு ஆள்கள் இல்லை. என்னை அறியாமலே எனக்குத் தெரிந்தது. அதாவது 1933ஆம் ஆண்டாக இருக்க வேண்டும்.  எனக்குப் புரிந்தாலும்,  புரியாவிட்டாலும் பெரியாருடைய பேச்சைக் கேட்ட பொழுது என்னை அறியாமலேயே எனக்குத் தெரிந்தது - ஜாதி என்பதெல்லாம் தவறு என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது - உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது தவறு என்பது. ஒரு சாதாரண ஆரம்பப்பள்ளிக் கூட ஆசிரியர் இடத்திலே மாணவன் பாடம் கேட்கக்கூடிய மனநிலை என்ன இருக்குமோ, அதைப் போல இருந்தது. அதற்குப் பின்னர் அய்யா அவர்களுடைய பேச்சை 12 வயதிலே, 14 வயதிலே கேட்டிருக்கிறேன். என்னால் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது
ஆனால் அப்பொழுது கூட அவ்வளவு இணக்கமாக என்னால் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது. 1938ஆம் ஆண்டு நான் பத்தாம் வகுப்புப் படிக்கின்ற பொழுதுதான், பெரியார் பேச்சை, அண்ணா பேச்சைக் கேட்டேன். அப்பொழுது தான் அவர்களுடைய பேச்சுகள் எனக்கு விளங்க ஆரம்பித்தன. அதற்கடுத்து இரண்டு ஆண்டுகளிலே நான் பல்கலைக் கழகத்திலே படிக்க வந்த காரணத்தால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே படிப்பதற்காக என்னுடைய தந்தையார் ஊக்கம் தந்தார். காரணம், அவரே ஒரு சுயமரியாதைக்காரர். “குடிஅரசு” ஏட்டை ஒப்பிப்பேன்.
காங்கிரஸ் இயக்கத்திலே என்னுடைய தந்தையார் இருந்தார். அய்யா அவர்கள் காங்கிரசிலே இருந்து விலகி வந்த பொழுது விலகி வந்தவர், என்னுடைய தந்தையார். மணவழகர் என்பது தமிழ்ப் பெயர்; கலியாண சுந்தரம் என்பது பழைய பெயர். என்னுடைய தந்தையார் என்னை, என்னுடைய தம்பிகளைப் படிக்க வைக்க மாயவரத்திலிருந்து சிதம்பரத்திலே வந்து தங்கி, அதுதான் ஏற்ற இடம் என்று என்னுடைய தந்தையார் படிக்க வைத்தார். நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே படித்த காரணத்தால் ‘குடிஅரசு’ ஏட்டில் நான் படித்ததை அப்படியே பல்கலைக்கழகத்திலே பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மாணவர்கள் கூட்டத்திலே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாய்ப்புக் கிடைக்கும் அங்கே பேசுவேன்.
அதற்குப் பிறகு வெளியிலே சென்று பேசுவேன். அப்படிப் பேசுகிறபொழுது, பேசப் பேச பேசத்தான் நான் உண்மையைப் புரிந்து கொண்டேன். படித்துப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் பல பேர். நான் பேசிப் பேசி புரிந்து கொண்டவன். என்ன காரணம் என்றால், படித்ததைச் சரியாக எண்ணிப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் எனக்கிருப்பதில்லை. அப்படியே இப்பொழுதும் பேசிவிட்டால் அதைவிட அதிகமாக எங்கேயாவது ஓர் இடத்தில் நான் பேசுகிறபொழுது நான் படித்ததன் சாயலில் அய்யா அவர்களுடைய எண்ணங்கள், அண்ணா அவர்களுடைய எண்ணங்கள், தமிழகத்தினுடைய நிலை இவற்றைக் குறித்துப் பேசுகிற அந்தச் சூழல், பேசும் பொழுது எண்ணி, எண்ணி நான் வளர்ந்த காரணத்தால், நான் இப்பொழுதெல்லாம் பேசுவதற்கே அஞ்சுவதற்குக் காரணம் அப்படியே இப்பொழுதும் பேசி விட்டால் என்ன செய்வது? (சிரிப்பு). அப்பொழுது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்கிறவன். இப்பொழுது எண்ணங்களுக்குப் பொறுப்புள்ளவன். (கைதட்டல்).
அப்பொழுது எண்ணங்களைப் பரிமாறுகிற பொழுது, ஏற்றுக்கொள்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்; மறுக்கிறவர்கள் மறுக்கட்டும். அது உண்மையாக இருந்தால் ஏற்கட்டும்; அது தவறாக இருந்தால் மறுக்கட்டும் என்ற அந்த அடிப்படையில் பேசிக்கொண்டிருக்க முடியும். என்னை நீங்கள் மதிக்கின்ற காரணத்தால்... இப்பொழுது என்னை நீங்களெல்லாம் மதிக்கிற காரணத்தால், மதிக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்ற காரணத்தால், ஒரு பல்கலைக் கழக மண்டபத்திலே பேசக்கூடிய நிலை ஏற்பட்ட காரணத்தால், சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருக்கின்றேன். சிந்தித்துப் பேச வேண்டிய ஒரு நிலை.
பெரியாரால் மகத்தான மாற்றம்
குறிப்பாக, தந்தை பெரியார் அவர்களால் ஏற்பட்ட மகத்தான மாற்றம் சாதாரண மானதல்ல. மிகப்பெரிய மாற்றம் (கைதட்டல்). அது வேண்டுமானால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. வரையறுத்துக் காட்ட முடியாது. ஆனால் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றம் என்று சொன்னால், ஒரு நான்காவது வகுப்பிலே படிக்கக்கூடிய ஒரு மாணவன் பட்டதாரியாக ஆகிய பொழுது எவ்வளவு பெரிய மாற்றமோ அதைப் போன்றதொரு பெரிய மாற்றம் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது.
மயிலாடுதுறையில் இரண்டு தெருக்கள் அதை உணர மாட்டார்கள் மக்கள். மயிலாடுதுறையிலே அங்கே இருக்கிற முக்கியமான தெருக்கள் - மகாதேவதெரு, பட்டமங்கலம் தெரு. இவைகளில் பெரும்பாலும் பிராமண மக்கள் தான் இருப்பார்கள். வழக்கறிஞர்களாக, என்னுடைய ஆசிரியர்களாக, மருத்துவராக இருப்பார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு கிராமங்களிலேயிருந்து சாதாரண மக்கள் வருவார்கள். ‘சாமி வீட்டிற்குப் போகிறேன்’ என்று தான் சொல்லுவார்கள். அய்யர் வீடு என்று சொல்ல மாட்டார்கள்.
எந்த சாமி வீட்டிற்குப் போகிறாய் என்ற கேட்டால், சொல்லுவார்கள் - டாக்டர் சாமி வீட்டிற்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லுவார்கள். அவ்வளவு அந்த அழுத்தமும் அந்த வைதிகச் செல்வாக்கும், பிராமணிய மகிமையும்,  நம்முடைய உள்ளத்திலே அவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தன. குறிப்பாகச் சொன்னால் அய்யா அவர்களை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று சொல்லுகிற காலத்திலே கூட, அந்தப் பெருமக்கள் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று சொல்ல மாட்டார்கள்.
‘நாயக்கர் என்ன கருத்தய்யா, சொல்லியிருக்கிறார்? ‘நாயக்கர்’ என்பதை வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர் பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டீர்களா? இதை வலியுறுத்தி வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர், முதலியார், நாயுடு நாயக்கர், முதலியார், நாயுடு என்று சொன்னால் மரியாதை என்று நினைத்த அது ஒரு காலம் உண்டு. பெரியாரும், வரதராஜுலு நாயுடு அவர்களும், திரு.வி.க. அவர்களும் அப்படி மதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், அதே சொல்லை இழிமக்கள் என்று தங்களைச் சொல்லக்கூடிய காலமும் வந்தது.
அப்படி எல்லாம் இருந்த நிலை இன்றைக்கு மாறி, அப்படிப் பளிச்சென்று யாரும் இன்றைக்குச் சொல்லத் துணிய முடியாத அளவிற்குச் சமுதாயத்திலே எண்ண ஓட்டம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் இன்றைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒரு வகையில் சொல்லப் போனால் தமிழன் கூனிக் குறுகி, உணர்விழந்து, தமிழன் என்று தன்னை எண்ண முடியாத அளவிற்கு இருந்த நிலை மாறி, இன்று ஏதோ தமிழன் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு அவர்கள் நிமிர்ந்து நிற்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் - புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு ஓர் இழிவு மனப்பான்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய அளவிற்குதான் பிறவியிலேயே ஏதோ தாழ்ந்து விட்டதாக எண்ணிய, மனப்பான்மையை மாற்றிக் கொள்ளக் கூடிய அளவிற்குத் தமிழ்நாடு மக்கள் இன்றைக்கு உயர்ந்திருக்கின்றார்கள்.
எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கலாம், நெருக்கடிகள் இருக்கலாம், துன்பங்கள் இருக்கலாம், தொல்லைகள் இருக்கலாம்; அரசியலில் தோல்விகள் இருக்கலாம். ஆனால் தமிழன் உயர்ந்து கொண்டிருக்கிறான் இந்த உயர்வுக்குக் காரணம் தந்தை பெரியார் (கைதட்டல்). பெரியாரை எதிர்த்துப் பேசியிருக்கலாம். பெரியாரை எதிர்த்துக் கூடப் சியிருக்கலாம். கண்டித்திருக்கலாம். அரசியலில் நிற்க வேண்டிய இடம் மாறுபட்டிக்கலாம். ஆனால் அந்தப் பெரியார் இல்லாவிட்டால், இந்த அமைச்சரவை வந்திருக்காது. அதைத்தான் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னார். (கைதட்டல்).
ஆக அண்ணா சொன்ன அடிப்படை - தமிழர்கள் என்றால் அய்யா-இல்லை என்றால், யாரும் இல்லை என்று பொருள் (கைதட்டல்) என்று சொன்னார். தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய அந்த சுயமரியாதை உணர்வு “நீ யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல; நீ அடிமை அல்ல; உன்னை விட உயர்ந்தவன் என்று சொல்லுவதற்குக் கூடத் தகுதி கிடையாது; பிறவியினாலே உன்னை விட உயர்ந்தவன் எவனும் இல்லை;  எவராக இருந்தாலும் அவர் மனிதர் தான்” என்று சொன்ன பொழுது, தாழ்த்தப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவனுடைய மனதிலும் ஒரு தெம்பு ஏற்பட்டது.
தாழ்த்தப்பட்ட மனிதனுக்காக - ஆதித்திராவிடர் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அவர் சமுதாயத்திற்கே பல நன்மைகளைச் செய்திருந்தாலும் கூட மற்ற சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அந்தப் பெரிய பணியைச் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள் (கைதட்டல்). பெரியார் இல்லை என்றால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பே இருந்திருக்காது.
மற்றவர்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்
தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பல வழிகாட்டுதல்களைச் செய்திருந்தாலும் கூட, மற்ற சமுதாயத்தினரின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அந்தப் பெரிய பணியை நிறைவேற்றுகிறவர் தந்தை பெரியார் அவர்கள். தாழ்த்தப்பட்டவரை மட்டும் ஓர் இயக்கமாக உருவாக்கி வளர்க்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன. அதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய பணியை எல்லோருடைய மனதிலும் இந்த எண்ணம் ஏற்படுவதற்கு தந்தை பெரியார் காரணமாக இருந்தார்.
தமிழ்மொழி தப்பிப் பிழைத்தது
தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் ஆட்சிமொழியாக இருந்தது. தமிழ்நாட்டில் தமிழன் என்ற நினைவோடு ஆட்சி நடத்துகிற வாய்ப்பு கலைஞர் ஆட்சிக்கு உண்டு. தெலுங்கு பேசுகிறவர்கள் இருக்கலாம். கன்னடம் பேசுகிறவர்கள்  இருக்கலாம். மராட்டியம் பேசுகிறவர்களாக இருக்கலாம். ஆனாலும் தமிழ்மொழி தமிழ் மக்கள் ஒரு பாரம்பரியமுள்ள மொழியைத் தாய்மொழியாகப் பெற்றிருக்கின்ற காரணத்தால் தமிழ்மொழி தப்பிப் பிழைத்துவிட்டது.
அண்மைக் காலத்திலே கூட மொழி அடிப்படையிலே ஆய்வு நடத்திய டாக்டர் கால்டுவெல் என்கிற பாதிரியார் திருநெல்வேலியிலே, உடன்குடியிலே வந்து 40, 50 ஆண்டு காலம் தங்கியிருந்தார். வடமொழி தயவில்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்த மொழிகளை எல்லாம் படித்து தமிழ் இலக்கியத்தை ஓரளவுக்குக் கற்று, வடமொழி ஏடுகளையும், ஓரளவுக்குப் பயின்று, ஒப்பியல் மொழி நூல் ஒன்றை வரைந்தார்கள்.  1858ஆம் ஆண்டு ஒப்பியல் மொழி நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தாலே முதன் முதலாக வெளியிடப்பட்டது.
அந்த ஒப்பியல் மொழி நூல் வரைந்தபொழுது தமிழ்மொழி வடமொழியின் சாயலில் பிறந்து வளர்ந்த மொழி அல்ல என்பதை நிலைநாட்டினார். ஏனென்றால் அது வரையில் இந்தியாவில் இருந்த எல்லா மொழிகளும் வடமொழியில் இருந்து பிறந்தவை; வடமொழி தயவில்லாமல் எந்த மொழியும் வளர முடியாது. தமிழாக இருந்தாலும்,வேறு எந்த மொழியாக இருந்தாலும் வடமொழியின் துணையின்றி, சொற்கள் கலப்பின்றி, வளரமுடியாது.
தமிழகத்தில் வடமொழி இல்லை
தொடக்க காலத்தில் அந்த நிலை இல்லை. தொடக்க காலத்தில் வடமொழியே தமிழகத்தில் வழக்கில் இல்லை. அதற்குப் பின்னாலே ஏறத்தாழ கி.பி. நான்காவது, அய்ந்தாவது நூற்றாண்டில் தொடங்கித்தான் வேகமாக வளர்ச்சி அடைந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்திலே தொடங்கி களப்பிரர் ஆட்சிக் காலத்திலே ஏற்பட்டதாகச் சில சான்றுகள் இருக்கின்றன. ஆக இடைக்காலத்திலே அது வளர்ந்து 13, 14ஆம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம்தான் உண்மையான மொழி. தமிழ் என்பது பேச்சு வழக்கிலே இருக்கின்ற ஒருகொச்சை மொழி, ஆக தமிழுக்கு ஒரு மரியாதை இல்லாத நிலை. தமிழுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காக வடமொழி கலந்து எழுதுகின்ற ஒரு வழக்கநிலை. மணிப் பிரவாள நடை அப்படி எல்லாம் இருந்தது.
தமிழ்க் குடும்பம் சமற்கிருதக் குடும்பம்
சமற்கிருதம் இல்லாமல் தமிழ் இயங்க முடியாது என்கிற நிலை. தமிழ்மொழி வடமொழியின் துணையின்றி இயங்கக்கூடிய மொழி; அந்த தமிழ் மொழி வடமொழியோடு தொடர்புடைய மொழி என்று சொல்லுகின்ற நிலை கிடையாது. சமஸ்கிருதம் ஒரு குடும்பம். தமிழ் ஒரு குடும்பம். தமிழ், குடும்பம் என்பது தமிழ்மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு இன்னும் பத்து, 12 மொழி எழுத்து வழக்கில் இல்லாமல், பேச்சு வழக்கில் வடபுலத்திலே வழங்குகிற மொழிகள் இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு மொழிக்குடும்பம்.
திராவிட மொழிக்குடும்பம்
திராவிட மொழிக்குடும்பம் என்று அவர் தான் அறிவித்தார். இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக் கழகத்திலே கூட அவரைப் பாராட்டினார்கள். அங்கேயும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கினார்கள். அவருடைய நூல் வந்ததற்குப் பின்னாலே, ஒரு 30 ஆண்டுக் காலத்திலே தமிழறிஞர்களிடத்திலே பல பேருக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. இல்லையானால் எவ்வளவு தான் சிறந்த மொழி என்று தமிழைப் போற்றிப் பாராட்டினாலும் தமிழ் தனித்தன்மையுடையது. எங்கள் மொழி தனிக்குடும்பம் என்று வாதாடுவதற்கு அவர்களுக்கு வழி இல்லை. கார்த்திகேயனார் என்பவர் தமிழ்மொழி வரலாறு எழுதினார்.
நம்முடைய சிறப்புகளை எல்லாம் எழுதி, தனித்தன்மையுடைதாகக் கூறினார். ஆனால், அந்த வாதம் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு அவரால் எடுத்துக் காட்டி வெற்றி பெற முடியவில்லை. அதை கால்டுவெல் எழுதினார். அதற்குப் பின்னர், பரிதிமாற் கலைஞர், மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுடைய பாடலை தமிழ் வாழ்த்துப் பாடக்கூடிய அளவிற்கு தமிழினுடைய தனித்தன்மை விளங்கியது. எடுத்துக்காட்டுவதற்கு, தமிழ்நாட்டிலே வரலாற்று ஆசிரியர்களுடைய கடமையாக ஆயிற்று. தமிழன் என்று சொல்லுகிற பொழுது, என்னதான் இருந்தாலும் ஆந்திரத்திலே உள்ள தமிழனாக இருந்தவன், தெலுங்கனாக ஆகிவிட்டவனை கைவிட்டது போல் ஆகிறது. கன்னடத்திலே உள்ளவர்கள் கூட, 1200 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய மொழி தமிழ்தான், பழைய கன்னட மொழி இப்பொழுதும் அங்கு சிலரால் பேசப்படுகிறது. அந்தக் கிராமத்து மக்கள் பேசுகிற பழைய சொற்றொடரிலே தமிழ் அதிகம்.
புது கன்னடத்திலே தமிழ்ச்சொற்கள் குறைவு. இதை ஓரளவுக்குத்தான் நான் சொல்ல முடியும். ‘திராவிடம்’ என்று டாக்டர் கால்டுவெல் வழங்கியதுதான் தமிழுக்கு மிகப்பெரிய அரணாக அமைந்தது. எங்களுடைய தமிழ் மொழி, வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழி அல்ல. தனித்து எழுதுகின்ற ஆற்றல் பெற்ற மொழி. மணிப்பிரவாள நடை தமிழை வளரவைக்காது; தமிழை வீழ்த்தும்; ஆக வடமொழி கலந்து எழுதக்கூடாது என்று மறைமலைஅடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம். இப்படி மொழி இயக்கம் ஒரு பக்கம் வளர்ந்தாலும், இன்னொரு பக்கம் நாங்கள் எல்லாம் திராவிடன் என்ற உணர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தது. தமிழன் என்று நான் சொல்லுகிறபொழுது கூட, தமிழ் மொழியைப் பேசுகிறவனை மட்டும்தான் குறிப்பிடும்.
ஆரியத்தோடு ஒட்டாது
நான்  திராவிடன் என்று சொல்லுகிற பொழுது, நான் ஆரியத்தோடு ஒட்டாது, இன்னொரு இனத்தைச் சேர்ந்தவன் என்று பிரித்துக் காட்டுகிற அந்த ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு. இங்கிலாந்து நாட்டுக்காரன் வந்து கூட இங்கு தமிழ் பேசலாம். டாக்டர் கால்டுவெல் கூட தமிழில் ஓரளவுக்கு எழுதக்கூடியவர். வீரமாமுனிவர் என்ற மற்றொரு பாதிரியார் - கான்ஸ்டான்டி நோபிள்காரர் அவர் தமிழிலேயே ஒரு நூல் இயற்றியிருக்கிறார். டாக்டர் ஜி.யு.போப் சைவ சித்தாந்தத்தை பற்றிப் பாராட்டிச் சொன்னவர். அவர் எழுதுகிற பொழுது சொல்லுகிறார், “தமிழ்நாட்டில், திருக்குறள், நாலடியார்” போன்ற அறநூல்களைப் பெற்றிருக்கிற பொழுது, உயர்ந்த அறநெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிற பொழுது, நீதி நெறிக்கருத்துகளைப் பெற்றிக்கிற பொழுது, அவர்கள் வேறு எந்த மொழி, பேசுகிறவர்களையும் விடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணி தலைகுனியத்தேவையில்லை. யாருக்கும் குனியத் தேவையில்லை” என்று ஜி.யு.போப் அவர்கள் சொன்னார்கள்.
திராவிடன் என்று சொன்னால் ஒரு செல்வாக்கு எனவே, அந்த அடிப்படையில் திராவிடன் என்று சொல்லுகிறபொழுது நம்முடைய தகுதி உயருகிறது. நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் உடைபடுகின்றன. அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் திராவிடன் என்று சொல்லுவதற்கு ஒரு செல்வாக்கு ஏற்படுத்தியது. அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடன் என்று சொல்லுவதற்கான காரணங்களைப் பல கட்டுரைகளில் எழுதினார். ஆனால், அய்யா முன்னிலையில் இருந்து அது நடைபெற்ற காரணத்தால்தான், நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று அழைத்தபொழுதுதான் தமிழ்நாட்டில் நாமெல்லாம் திராவிடர் என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.
இல்லையானால், ஏதோ ஒரு கருத்து, பரிதிமாற் கலைஞருடைய நூல் - தமிழ்மொழி வரலாறு எவ்வளவு சிறந்த கருத்துகளைக் கொண்டதாக இருந்தாலும் சாதாரண மக்கள் எப்படி அறியப் போகிறார்கள்?
பெரியார் இல்லையென்றால்...
பெரியார் இல்லையானால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படக் கூட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. இன்னும் சொல்லப்போனால் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், புலவர்கள் எல்லாம் உப்பரிகையிலே உலவிக் கொண்டிருப்பதைப் போல சிறந்த நூல்களை அவர்கள் வேண்டுமானால் படித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் திராவிடன் என்றால் அந்தக் காலத்திலே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை மக்களிடத்திலே கொண்டு சென்றபொழுது தொடக்கத்திலே எங்களைக் கூடக் கேட்பார்கள். நான் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவனாக இருந்த பொழுது கேட்பார்கள். அடுத்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தேன். என்ன நீங்கள் எல்லாம் திராவிடன் - திராவிடன் என்றால் ஆதிதிராவிடனா? என்று கேட்பார்கள். திராவிடன் என்று சொன்னாலே ஆதித்திராவிடனோடு இணைத்துச் சொல்லுவார்கள்.
நான், அப்பொழுது ஒரு பதில் கூட சொல்லி யிருக்கின்றேன். ‘ஆதித்திராவிடன் என்றால் இந்த நாட்டுக்கே சொந்தக்காரன் என்று அர்த்தம். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேகம்தான்” என்று சொல்லி யிருக்கிறேன். “ஆதி திராவிடன் தான் இந்த நாட்டுக்கே முழு உரிமை உடையவன். மற்றவரெல்லாம் அதற்கு அடுத்த உரிமை உடையவர்கள்” என்று சொல்லியிருக்கின்றேன். ஆகவே, அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சொல் நம்மைக் காப்பாற்றுகிறது. அடுத்து, பகுத்தறிவு இயக்கத்தினுடைய பிரச்சாரம் நடைபெற்ற முறை இருக்கிறதே, அது சாதாரண மக்களிடத்திலே பகுத்தறிவுக் கருத்துகளை மேல் நாட்டினரைப் போலக் கொண்டு சென்றிருக்கிறது. மிகப்பெரிய அறிவாளிகள், அறிவாளிகள் கூட்டத்திலே தான் பேசுவார்கள்.
பகுத்தறிவு இயக்கத்தைப்  பாமர மக்களிடம் கொண்டு சென்றார்
ஆனால், இங்கே அய்யா அவர்கள் பகுத்தறிவு இயக்கத்தைப் பாமர மக்களிடத்திலே கொண்டு சென்றார்கள். (கைதட்டல்). அந்தப் பாமர மக்களிடத்திலே கொண்டு சென்றது இரண்டு அடிப்படையில் - ஒன்று, பகுத்தறிவு இயக்கம் பாமரர்களுக்குத்தான் தேவை. மிக அடிப்படையான தேவை. இரண்டாவது, பாமரர்கள் விழிப்படைந்து விடுவார்களேயானால், அவர்கள் எண்ணியதைப் பெற்றுவிடலாம். படித்தவர்கள் தங்களுடைய தகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தங்களைவிட அதிகம் படித்தவர்கள் பின்னாலே போனால் தங்களுக்குத் தான் பெருமை. சேரிப்பகுதி மக்களிடம் பழக மாட்டார்கள்
பெரிய பண்டிதர்கள் பின்னாலே சாதாரணப் பண்டிதர்கள் போவார்கள். அதாவது உலகத்தின் இயற்கை - சாதாரணப் பாமர மக்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்கு என்ன காரணம்? பழக்கம், முதல் காரணம். இரண்டாவது, நம்முடைய மரியாதை எங்கே குறைந்து விடுமோ என்று கருதுவார்கள். சேரிப் பகுதியிலே இருக்கிற மக்களிடத்திலே மற்றவர்கள் பழக மாட்டார்கள். அவர்கள் வேண்டுமானால் மற்றவர்களிடத்திலே பழகுவார்களே தவிர, சேரிக்குள்ளே மற்றவர்கள் போக மாட்டார்கள். என்ன காரணம்?
அங்கே போய் விட்டால் நாம் அவரோடு சேர்ந்து விட்டோம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனப்பான்மை. பயன்படாத அந்த உணர்வு இருக்கிறதே, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களுக்குக் கீழே உள்ளவர்களிடம் பழகாமல் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம் வீட்டாரிடம் இந்துக்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள், ஒரு காலத்தில் - இப்பொழுது அல்ல. கோமுட்டிச்செட்டியார் திண்ணையில்தான் சாப்பிடுவார் என்னுடைய தந்தையாரின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார். அவர் நல்ல மனிதர். அவர் எங்கள் வீட்டிற்கு வருவார், கிராமத்தில். அவர் வந்தால் எங்கள் வீட்டுத் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார். வீட்டிற்குள் வர மாட்டார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால் அந்த சொம்பை வாங்கி, அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு, அவர் போய் கிணற்றிலிருந்து நீரை எடுத்து அந்த தண்ணீரைத்தான் குடிப்பார்.
அவரும் சைவர்; நாங்களும் சைவர்; அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிடமாட்டார். என்ன சொல்லுவார் “அரிசியைக் கொடுத்து விடுங்கள். நானே பொங்கிக்கொள்கிறேன்”  என்று சொல்லுவார். அரிசி, பருப்பைக் கொடுத்தால், அதை வைத்துத் திண்ணையிலே பொங்கி அதைத்தான் சாப்பிடுவார். கோமுட்டிச் செட்டியாரே அந்த மாதிரி. அப்படி இருந்தால் தான், அவருடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது கோமுட்டிச் செட்டியார்கள் நூற்றுக்கு அய்ம்பது பேர் சுயமரியாதைக்காரர்களாகவே ஆகியிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்னாலே அப்படிப்பட்ட நிலை இருந்தது. ஆக அப்படிப்பட்ட சூழ்நிலையிலே சாதாரண மக்களிடத்திலே போய் சுயமரியாதை இயக்கத்தை - பகுத்தறிவுக் கொள்கையை இன்னும் பரப்பியவர் - சொல்லப்போனால் “ஜாதி இல்லை என்று சொன்னவர்” தந்தை பெரியார் தான். எந்த மனிதனும், இன்னொரு மனிதனை ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வெள்ளை நிறத்தவரை விட.....
இன்னும் சொல்லப்போனால் வெள்ளை நிறத்தவர்களை விடக் கறுப்பு நிறத்தவர்கள் தான் பெரிய அறிவாளியாக இருக்கின்றார்கள். பெரிய இசைவாணர், மிகப்பெரிய கலைஞர், மிகப்பெரிய மருத்துவர் எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். ஆகவே, எந்த மனிதனும் பார்வையினாலே அறிவிலே உயர்ந்தவன் அல்ல. தகுதியிலே குறைந்தவன் அல்லன். மதிக்கப்படக் கூடாதவன்  அல்லன். ஆனால், இந்த நாட்டைப் பொறுத்த வரையில்  தவறான ஓர் எண்ணம். நான் கருக்கமாகத் தான் முடிக்க வேண்டும்.நான் பேசிக்கொண்டே போனால் பயன் குறைந்து விடுமோ என்று கருதுகின்றேன்.
ராஜகுரு, புரோகிதர்களுக்குச் செல்வாக்கு
நம்முடைய நாட்டிலே இறை வழிபாட்டை மய்யமாக வைத்து ஒரு மத ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்காக ராஜகுருக்களுக்குக் கிடைத்த செல்வாக்கு, புரோகிதர்களுக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு புரோகித ஆதிக்க மதத்தை உருவாக்கினார்கள். அதைத்தான் “இந்து இம்பீரியலிசம்”, என்று சொல்லுவார்கள். அதாவது இந்து மதம் என்கிற பெயராலே பிராமணர்கள் முழு ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு முறையைத் துவக்கினார்கள். நாடு முழுவதும் புரோகிதர்கள் பரவினார்கள். ஏனென்றால், மெல்ல, மெல்லப் புரோகிதர்கள் நாடு முழுக்கப் பரவினார்கள். அந்தக் காலத்தில் புரோகிதர் என்ற பெயர் இருந்ததோ இல்லையோ, இன்னும் சொல்லப் போனால் அய்யா அவர்கள் சொன்ன கருத்துப்படி பிராமணப் புரோகிதர்கள் என்பவர்கள் பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் மட்டும் தான் திருமணம் செய்து வைப்பார்கள்.
சூத்திரர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பிராமணர்கள் வரமாட்டார்கள். வர மறுப்பார்கள். முதலியாராக இருந்தாலும் சரி, செட்டியாராக இருந்தாலும் சரி, சூத்திரர்களுடைய வீட்டிற்கு வரமாட்டர்கள். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்திலேதான், வடநாட்டு பிராமணர்கள் தென்னாட்டிற்கு அதிகமாகக் குடியேறினார்கள் - ஆந்திரப் பகுதியிலேயிருந்து, அப்படிக் குடியேறிவர்களுக்குக் கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைக்கவில்லை. அவ்வளவு பேர் வந்தார்கள். அவர்கள் என்ன செய்வது என்று பார்த்தார்கள். திருமலை நாயக்கர் மன்னர் முன்னிலையில் ஒரு மாநாடு கூட்டிக் கலந்து பேசி, இனிவடமாநில பிராமணர்கள் பிராமண, சத்திரிய வைசிய அல்லாத சூத்திரர்கள் வீட்டுத் திருமணங்களை எல்லாம் நடத்தி வைக்கப் போகலாம்.
மணமகனுக்கு பூணூல் போட்டு அப்படிப் போகிற பொழுது, அங்கே மணமகனுக்கு ஒரு பூணூல் போட்டு, உயர்ஜாதியாக்கித் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். திரும்பி வருகிற பொழுது அந்தப் பூணூலை வாங்கி ஒரு கிணற்றிலேயோ அல்லது ஒரு நீர் நிலையிலேயோ போட்டு விட்டுத் திரும்பி வரவேண்டும். அதன் பிறகு அந்த பிராமணர் குளித்துவிட்டு, தீட்டுக் கழித்து விட்டு, வீட்டுக்குள்ளே போக வேண்டும்.
வடமா பிராமணர்கள்
இது வடமா பிராமணர்கள் தவத்தால் அன்றைக்கு ஏற்றுக்கொண்ட தியாகம் (சிரிப்பு-தைகட்டல்). அப்படி அந்த முறை வந்த காரணத்தாலே, என்ன வாய்ப்பு ஏற்பட்டது என்று கேட்டால் கொஞ்சம் வசதியானவர்கள். பிராமணர்களை அழைப்பது என்று முடிவெடுத்தார்கள்.
முக்குலத்தோர் சமுதாயத்தில்
சிவகங்கை வட்டாரத்திலே உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர், பிராமணர்களை வைத்துத் திருமணம் நடத்துகிறார்கள். அவர்கள் மத்தியிலேயே, நூற்றுக்கணக்கான சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அது ஒரிஜினல் மூடநம்பிக்கை (சிரிப்பு). அதே மாதிரி வேறு பல சமுதாயத்திலே அவர்களுடைய சமூகத்தினரை வைத்துக் கொண்டே திருமணத்தை நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த பிராமணர்களை அழைப்பதில்லை. வள்ளுவர், பண்டாரம் என்று அவர்கள் வேறு தனியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கோவில்களுக்கு, மேல்தட்டு மக்களிடத்திலே செல்வாக்கு ஏற்பட்டது.
ராஜகுருக்களுக்கு ஏற்பட்ட  செல்வாக்கு
மன்னர்களிடத்திலே ராஜகுருக்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு, மற்றவர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு, அதன் விளைவாக அந்தப் புரோகிதர்கள் சொல்லுவது தான் மதம்; வேறொன்று மில்லை. சிவனை வழிபடலாம். அது ஒரு தனி மதமாகக் கூட அண்மைக் காலத்திலே ஏற்பட்டது. ஒரு ஆயிரம் ஆண்டு காலமாகத்தான் அது தனியாக வெளியே தெரிய ஆரம்பித்தது. கோவில்களுக்குப் போவான். இருப்பதைக் கும்பிட்டுவிட்டு வருவான். எதைக் கும்பிடுவான் என்று அவனுக்கே தெரியாது. இப்பொழுது கூட, எத்தனையோ கோயில்களில் என்னென்ன சாமிகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான சிலை.
மதம் என்பது
ஆக மதம் என்பது கோயில்களுக்குச் செல்வாக்கு ஏற்பட உருவாக்கப்பட்டது. இன்றைக்கு இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது புரோகித மதம் - பிராமண மதம். பிராமணன் மற்றவர்களை ஆள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மதம். பிராமணர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மதம்.
ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா
விலே உள்ள மக்களை அடையாளம் காட்டுவதற்கு முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சி, ஜெயின், புத்திஸ்ட், சீக்கியர் என்று சொல்லுவதைப்போல - இந்து என்று மிச்சமிருக்கிற அனைவரையும் அழைக்கின்ற பழக்கமுண்டு. அந்த இந்து என்கிற பெயருக்கே கூட, ஏறத்தாழ அதில் பார்சி அடக்கப்பட்டார்கள். ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். நல்ல வேளை அவர்கள் ஒவ்வொருவராக, நாங்கள் இந்து என்று சொன்னால், எங்களை அடையாளம் காட்ட முடியாது. நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று அண்மைக் காலத்திலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.
‘சிந்திஸ்’ என்று சொன்னார்கள். ஆனால், “இந்து” என்கிற பெயர் ஆரம்பத்தில் வருகிறபொழுது, சிந்து நதிக்கரையிலே வாழ்கிறவர்களை, பார்சிகாரர்கள் குறிப்பிட்டு எழுதுகிறபொழுது அவர்கள் “சிந்திஸ்” என்று எழுதியது - பிறகு இந்து என்று மாறியது. அப்புறம் வடபுலத்திலே இருக்கிறவர்கள் தான் - இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். கடைசியாக வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததற்குப் பின்னாலே, எல்லோரையும் இந்துக்கள் என்று அழைத்தான். இந்துக்கள் என்ற பெயர் அப்பொழுதுதான் நமக்கு ஒருகேடுபாடு ஏற்பட்டது. இந்து என்று அழைப்பதால் தான் அதை காஞ்சி சங்கராச்சாரியார் எழுதுகிற பொழுது கூட “நல்ல வேளை வெள்ளைக்காரன் வந்து இந்து என்று நம்மை அழைத்ததனாலே தான், நாம் தப்பினோம். இல்லையானால் ஒரே மதமாக நம்மைச் சொல்ல, வழி ஏற்பட்டிருக்காது”
“இந்து என்று எல்லோரையும் அழைப்பதால் தான், ஜெகத்குருவாக இருக்கிறோம்” என்று அவரே சொல்லக்கூடிய அளவுக்கு, வரலாறு இருக்கிறது.  தந்தை பெரியார் அவர்களுடைய தந்தையார் வியாபாரி. நல்ல இலாபம் வரக்கூடிய தொழில். அதிலே, அந்தத் தொழிலிலே பெரியாருக்கு ஓர் ஈடுபாடு. தெளிவான ஓர் அறிவு ஓட்டம் ஆனால், எப்படியிருந்தாலும் அவர் ஒரு சுயசிந்தனையாளர். ரொம்பத்திட்ட வட்டமான தெளிவான ஓர் அறிவு ஓட்டம். அவர் எதைச் சொன்னாலும் சொல்லுகிற பொழுதே சிந்திக்கிற ஆற்றல் பிறவியிலேயே அவரிடத்திலே இருந்தது. அவர் ஒன்றும் படித்துப் பார்த்துப் பகுத்தறிவுவாதியாக ஆகவில்லை.
எதைச்சொன்னாலும் சிந்திக்கிற பழக்கம் ஆனால் பகுத்தறிவு வாதியாக வளர்ந்தார். எதைச் சொன்னாலும் அதைப் பற்றிச் சிந்திக்கிற ஒரு பழக்கம் அவரிடமிருந்தது. யோசிக்க வேண்டும். யோசிப்பது என்று சொன்னால் மறந்து விட்டு யோசிக்கிற கதை அல்ல. இதை ஏன் செய்யணும்? அந்தக்  கேள்வி அவரிடத்திலே பிறந்த காரணத்தால், தானாகவே ஒரு வளர்ச்சி உண்டாகக் கூடிய ஓர் அடிப்படை அவருக்கு ஏற்பட்டது. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டார். ஏன்? எதற்கு? எப்படி? என்று ஒரு கேள்வி பிறந்துவிடுமேயானால், அவர்களுடைய அறிவிலே ஒரு வளர்ச்சி ஏற்படும். பெரியார் அவர்கள் இளமையிலேயே இயல்பாகவே அந்த உணர்வைப் பெற்றார். எதை எதையோ போட்டி போட்டுக்கொண்டு செய்யக் கூடாததை எல்லாம் செய்து பார்ப்பார். நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் மன்னித்துக்கொள்ள வேண்டும்.
நான் மாணவனாக இருக்கின்ற பொழுது எனது தகப்பனார் சைக்கிளில் என்னை முன்னாலே உட்கார வைத்து அழைத்துப் போனார். இரவு 8 மணிக்கு சைக்கிளில் விளக்கை கொளுத்தி வைத்து, உட்கார வைத்து என்னை அழைத்துக் கொண்டு செல்லுகிற பொழுது, விளக்கு சுடும் என்று சொல்லுவார். நான் என்ன என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன். என் விரல் கொப்பளித்து விட்டது. என்னுடைய விரலை எடுத்து இழுத்து அந்த விளக்கிலே வைத்தார். என்னுடைய விரல் கொப்பளித்துப் போய்விட்டது. அவருக்குத் தோன்றிய உணர்வு எனக்குத் தோன்றியது கிடையாது. இந்தச் சூடு பட்டு கை பழுத்துப் போய்விட்டால் அவன் தெரிந்து கொள்வான் என்று நினைத்தார்.
ஆக, அது மாதிரி பெரியாருடைய மனப்பான்மை எதையும் அதனுடைய ஆழமான அடிப்படை என்னவோ - சிந்தித்துப் பார்க்கிற ஒரு பக்குவத்தைப் பெற்றிருந்தார். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு கடைக்காரர் சின்ன மண்டிக் கடை. அதை தட்டி போட்டு மூடி வைத்துவிட்டு செல்லக்கூடிய கடை. தட்டியைத் தட்டிவிட்டார். அந்தக் கடையில் உட்கார்ந்து, கடை வியாபாரி வியாபாரம் செய்து கொண்டிருப்பார். பெரியார் இளைஞர். அப்பொழுது 12 வயது 15 வயதிற்குள்தான் இருக்கும். அவர் என்ன செய்தார். அந்தத் தட்டியை மெதுவாகத் தட்டி, விட்டார். தட்டி அந்தக் கடைக்காரர் தலையில் விழுந்து அடிபட்டது. “என்னடா, தட்டியைத் தட்டி விட்டாயே என்று அந்த கடைக்காரர் அலறிய பொழுது” - ‘எல்லாம் உன் தலைவிதி’ என்று சொன்னார். இயற்கையாக ஏற்படக்கூடிய ஓர் அறிவு.
தண்ணீர் குடிக்காதே! தீட்டு... அதே மாதிரி இந்த இடத்தில், தண்ணீர் குடிக்காதே தீட்டுப் பட்டுவிட்டது என்று சொன்னால், அங்கே போய் தண்ணீர் குடித்துவிட்டு, ஒன்றும் இல்லையே அம்மா! தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு பக்குவம் அவருக்கு அப்படி பிடிவாதமாக இருக்கக்கூடியவர். யாரிடம் பழகக்கூடாது என்று சொல்கிறோமோ, அவர்களிடம் பழகக்கூடியவர். இன்னும் சொல்லப்போனால் நல்ல நடத்தை இல்லாதவர்களிடத்திலே கூட, அவர் பழகியிருக்கலாம். அதனால் அவர் கெட்டுப் போகவில்லை. அந்தப் பழக்கத்தினால் உள்ள விளைவுகளை இவர் உணர்ந்தவராக இருந்திருக்கிறார். பெரியார் சீட்டாடுகிற இடத்திலே இருந்திருக்கிறார். வேறு விதமான மது சாப்பிடுகிற இடத்திலே அவர் இருந்திருக்கிறார். ஆனால், அவர் கெட்டது கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் அவர் அறிவு நம்பாததை எதையும் அவர் நம்பமாட்டார். என் அறிவுக்கு சரியாகப்படவில்லை. சாமி கும்பிடமாட்டார். சாமி கும்பிடு என்று சொன்னால் சாமி எங்கேயிருக்கிறது? எனக்குத் தெரியவில்லையே. ஆகவே நான் நம்பவில்லை என்று சொன்னார். தன் அறிவில் நம்பிக்கை வைத்திருந்தார். தன்னுடைய அறிவிலே ஒரு நம்பிக்கை வைத்திருந்தார். அது பெரிய வளர்ச்சி-சுயவளர்ச்சி.  பேரறிஞர் அண்ணா நீரோடு போய் கரையேறுவார்; தந்தை பெரியார் எதிர்நீச்சல் அடித்துக் கரையேறுவார்.
வைக்கத்தில் போராட்டம்
பெரியாரின் சிந்தனை வளர்ச்சி என்பது சுயவளர்ச்சி. பெரியார் தேசிய காங்கிரசில் ஈடுபட்ட பொழுது, நாட்டுக்கே விடுதலை என்று நினைத்தார். பாரதியார் பாடியதுபோல, பார்ப்பனருக்கும், புலையருக்கும், எல்லோருக்கும் விடுதலை என்று எண்ணிக்கொண்டு அந்த இயக்கத்திலே ஈடுபட்டு, வைக்கத்திலே போய் ஒரு பெரிய போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறையிலேயே இருந்து, அதன் பிறகு போராட்டம் வெற்றி பெற்று, அங்கே உள்ள தீண்டப்படாத மக்களுக்கு அங்கே உள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருவிலே நடக்கிற உரிமை மறுக்கப்பட்ட பொழுது, பெரியார் போராடினார். அப்பொழுது அங்கே உள்ள காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் எல்லாம் பெரியார் ஈ.வெ.ராமசாமி வந்ததனாலே தான் எங்களுடைய போராட்டம் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, ஜார்ஜ் ஜோசப் என்று ஒரு தலைவர் இருந்தார். அவர் பாராட்டக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார் பெரியார். தனது தென்னை மரங்களை வெட்டினார்
மது விலக்குக் கொள்கையை ஆதரித்து அதற்காகப் பெரியார் அவர்கள் தனது சொந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டினார். இழப்பு ஏற்படுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதற்குப் பிறகு கதர்த் தொழிலைப் பரப்பினார்.
காங்கிரஸ் கட்சியிலே இருந்து வெளியேறுகிறார்
காங்கிரஸ் கட்சியினாலே வரக்கூடிய விடுதலை வரும் என்ற நம்பிக்கையிலே இருந்தபொழுது, அதே காங்கிரஸ் கட்சி அவ்வளவு பெரிய விடுதலைக்குப் போராடக்கூடிய கட்சி. தமிழ்நாட்டிலே அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்திலே பிராமணியத்தின் தலைமையில்தான் அந்தக் கட்சி இருக்கிறது என்று கருதி, ஒரு முறைக்கு இருமுறை திரும்பப் திரும்பப் பார்த்து அதை மாற்றுவதற்கு முயற்சித்து, சிந்தித்து நூற்றுக்கு அய்ம்பது இடமாவது - பாதி இடமாவது பர்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகத்தில், ஆட்சியில்  இடம் வேண்டுமென்று கேட்டு, 1922, 1923, 1924 மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தீர்மானம் கொடுத்து, திரு.வி.க உள்பட அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் மறுத்தார். கடைசியாக 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே காங்கிரஸ் கட்சியை விட்டுப் பெரியார் வெளியேறி விட்டார். அப்பொழுது அவருடைய மனதிலே ஆழமாகப் பட்ட கருத்து என்ன? காங்கிரசிலேயிருந்து வெளியேறியது மிகச் சாதாரணம்.  வைதிகத்திலிருந்து வெளியேறினார்.
வைதிகத்தை எதிர்ப்பதற்கு அதுதான் தொடக்க விழா. வைதிகப் பிடிப்பு காங்கிரசிற்கு இருக்கிறது. கோவிலுக்குப் போகிறவர்கள் அவர்கள்தான். மக்களின் மனப்பான்மையிலும் இருந்தது. அந்த மனப்பான்மையை வீழ்த்த வேண்டும் என்பதால்தான் தமிழன் தலைநிமிர முடியும் என்ற எண்ணம் இருந்தது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரியார் மனதிலே பதிந்தது. அதற்குப் பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். ஞானியார் அடிகளாரை வைத்துத்தான் “குடிஅரசு” தொடங்கப்பட்டது.
பச்சை அட்டை “குடிஅரசு”
இன்னும் சொல்லப்போனால், அந்த நாட்களிலே “குடிஅரசு” வருமேயானால் பச்சை அட்டை குடிஅரசு என்று தான் அதற்குப் பெயர். “நவசக்தி” வேறு ஒரு காக்கி கலரில் இருந்தது. அந்த பச்சை அட்டை “குடிஅரசு” ஏட்டைத் தோழர்கள் தீவிரமாக விரும்பிப் படிப்பார்கள். பெரியார் அவர்களுக்கு இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லுவதில் ஒரு பெரிய மகிழ்ச்சி. அவர் உடல் நலம் கெட்டிருந்தால் கூட, இதைப் பேசினால், அவருடைய உடம்பு தெம்பானதற்குக் காரணம் மகிழ்ச்சி - அதாவது பகுத்தறிவு வாதம் பேசுவதிலே ஒரு மகிழ்ச்சி.
பெரியாருக்கு ஒரு மகிழ்ச்சி
பார்ப்பனியத்தைக் கண்டிப்பதிலே ஒரு மகிழ்ச்சி, ஜாதியை ஒழிப்பதிலே ஒரு மகிழ்ச்சி, தீண்டாமையை ஒழிப்பதிலே ஒரு மகிழ்ச்சி. இதை அவர் ‘எஞ்சாய்’ பண்ணினார். இதைப் பேசுவதற்காக அவரே பணம் கொடுத்துப் பேசுகிற அளவுக்குத் தயாரானார். (சிரிப்பு). அவர் சொன்ன ஒரு வார்த்தை நான் எனக்காக சிந்திக்கிறேன். நானே அச்சடித்து நானே படிப்பேன். நான் எனக்காகப் பேசுகிறேன். நான் எனக்காகப் பேசுவதை நீ உனக்காகக் கேள். சரி என்று பட்டால் ஒத்துக் கொள். இல்லாவிட்டால் விட்டு விடு. அதே மாதிரி பத்திரிகை ஏராளமாக விற்பனையாகாமல் இருந்தபொழுது, “குடிஅரசு” ஏட்டிற்காக நானே கட்டுரைகளை எழுதுவேன். நானே அதை அச்சுக்கோத்து அச்சடிக்கச் செய்வேன். நானே மடிப்பேன்; பிறகு நானே அதை பிரித்துப் படிப்பேன். அப்படிப்  பிரித்துப் படித்துவிட்டுத் திரும்ப நானே படித்துக் கொள்வேன். யார் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் “குடிஅரசை” எனக்காக அச்சடித்துப் படிப்பேன் என்று சொன்னார்.  அப்படியானால் அவருடைய அடிப்படை உரிமை என்ன?
வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படமாட்டார். வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பார்க்க மாட்டார். எவ்வளவு பேர் வருகிறார்கள், எவ்வளவு பேர் சேருகிறார்கள் என்று அந்தக் கணக்கைப் போட்டு அவர் பார்க்க மாட்டார். பகுத்தறிவைப் பேசுவது, அதைப் பரப்புவது அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி; பெரிய இன்பம். இன்னும் சொல்லப்போனால் அவர் 95 வயது வரை ஆரோக்கியமாக இருந்தார் என்றால், பகுத்தறிவைப் பேசியதால் தான் ஆரோக்கியமாக இருந்தார். (கைதட்டல்). அதாவது, ஆநவேயட சுநடநைக என்று சொல்லுவார்கள். சிந்தித்துப் பார்க்கிறவர்களுக்கு இன்னின்ன அநீதி என்று சொல்லுகிறபொழுது, அநீதியை எதிர்ப்பதற்கு நான் இதைப் பேசினேன். பேசுவதிலேயே ஒரு சந்தோஷம்.
யாராவது தொழில் சரியில்லை என்று சொல்லி வீட்டிற்குப் போனால், மனைவியிடம் சண்டைபோடுவான். மனைவியிடம் ஏன் சண்டை போடுகிறான் என்றால், அவனுடைய மனநிலை சரியில்லை. அவனுடைய மனது, கோப தாபத்தில் இருப்பதால் மனைவியிடம் கூட ஒத்துப் போக முடியாமல் சண்டை போடுவான். ஒன்றும் புரியாமல் பேசிக்கொண்டிருப்பான். மனசாட்சி எதுவோ... அது மாதிரி  மனம் பல பேரை பாதிக்கும். பெரியாருடைய மனசாட்சி எதுவோ, அதன்படி தான் பேசுவார். அதனால்தான் அவரால் மெல்ல, மெல்ல, வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கூட, வர வர அவருடைய கருத்துகள் வலுப்பெற்றுக் கொண்டே வந்தன.  வளர்ச்சி அடைந்தது. இன்னும் ஒருபடி மேலே, போய்ச் சொன்னால் இயக்கத்தைச் கட்டிக்காப்பாற்றினார்
“ஒர் இயக்கம் என்ற முறையில் சுயமரியாதை இயக்கத்தை அவர் கட்டிக் காப்பாற்றினார். எதையும் எல்லோரும் சேர்ந்து  தீர்மானிப்பது என்பது கூட இருக்காது. அவரே தான் தீர்மானிப்பார். அவர் சொன்னதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” டபிள்யூ, பி.ஏ. சவுந்திர பாண்டியன் கூட அதில் கொஞ்சம் மாறுபாடு கொண்டவராக இருநதார் என்பதெல்லாம் உண்மைதான்.
பெரியாருடைய இயற்கை
உண்மைதான் என்றால் இது அவருடைய இயற்கை. பெரியாருடைய இயற்கையை நாம் என்ன செய்ய முடியும்? நான் தீர்மானித்துச் செய்வது தான் சரி. மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்க வேண்டும். சேர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதுதான் அவருடைய கொள்கைக்குப் பாதுகாப்பு என்று கருதினார். அவர் எதைத் தன்னுடைய கொள்கை என்று நினைத்தாரோ அதற்கு, அதுதான் பாதுகாப்பு”.
பெரியாருக்கும் - அண்ணாவுக்கும்
அண்ணாவுக்கும், அய்யாவுக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்று கேட்டால், அண்ணா அவர்கள் கூட, அவர் நினைப்பதைக் கூட நிறைவேற்றுவார். ஆனால் அவர் நினைத்தது தான் என்று சொல்லிக் கொண்டிருக்கமாட்டார். எல்லோரும் சொல்வதையும் கேட்டுவிட்டு, அவர் நினைப்பதையும் சொல்லி, மற்றவர்கள் எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்துவிடுவார். ஒத்துக்கொண்டதற்குப் பின்னாலே, ஜனநாயக ரீதியாக அவர் அதை நிறைவேற்றுவார். ஜனநாயக ரீதியாக சில இடங்களில் விட்டுக்கூடக் கொடுப்பார்.
தன் லட்சியத்தில் உறுதி
ஆனால், அய்யா அவர்கள் எப்பொழுதும் தவறிப்போனதில்லை. தன்னுடையச்  இலட்சியத்தில் உறுதியாக இருப்பார். அந்த முடிவினாலேதான் மணியம்மையார் அவர்களுடைய திருமணத்தின் பெயராலே வெளியே வந்தபொழுது, “என்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற நான் ஒரு வழிதேடிக் கொள்கிறேன் என்று சொன்னார். இன்னும் சொல்லப்போனால்  பெரியாருக்கு வயது ஆக ஆக தனக்குப் பின்னால் இந்தக் கொள்கை காப்பாற்றப்பட வேண்டுமானால் இப்படிப்பட்ட ஒரு முறை இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். (கைதட்டல்). அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அது இயற்கை. (கைதட்டல்).
பெரியாரைவிட உலகில் ஒரு தலைவர் கிடையாது.
நாம் சொல்லவேண்டியதைச் சொல்லுவோம் என்ற மனப்பக்குவம் இருந்த காரணத்தால், ஓர் உறுதி இருந்த காரணத்தால் அவர் துணிந்து தன் வழியிலேயே சென்றார். இப்பொழுது கூட நான் சொல்லிக்கொள்கின்றேன். பெரியார் ஒரு தனி மனிதர். பெரியாரை விட பெரிய தலைவர் உலகத்திலே வேறு யாரும் கிடையாது. (பலத்த கைதட்டல்). மற்றவர்கள் எல்லாம் நான்கு பேரோடு சேர்ந்து என்ன செய்வது அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. இதற்கு ஒரு நியாயம் இருக்கிறது.
பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு, மத எதிர்ப்பு இவ்வளவையும் பேசிக்கொண்டிருக்கிற ஒரு தலைவருக்கு ஓர் ஆழமான கருத்து ஊன்றியிருக்குமானால் அந்தக்கருத்துக்குத் தான் அவர் முக்கியத்துவம் தருவார். அந்தக் கருத்துதான் அவரை ஆளும்; அந்தக் கருத்து அவரை ஆண்டு கொண்டிருக்கிறது. வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது எனவே, அவர் அப்படி ஆற்றுகிற தொண்டின் காரணமாகத்தான் நம்முடைய  ஆசிரியர் வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது கூட தமிழ்நாட்டிலே இவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
நம்மை உருவாக்கியவர் பெரியார்
இங்கே இருக்கிற மாற்றங்கள், அரசாங்க சாதனைகள் என்று சொல்லுவதை விட இவ்வளவு பெரிய கூட்டம் சென்னைப் பல்கலைக் கழகத்திலே பெரியாரைப் பற்றி, வீரமணி தலைமையிலே அன்பழகன் பேசுகிறேன் அதற்கு இவ்வளவு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், நம்மை உருவாக்கியவர் பெரியார், அதனால் இங்கே வந்திருக்கிறீர்கள். தந்தை பெரியாராலே ஏற்பட்ட உணர்வுதான் இவ்வளவு பேரை ஒன்று சேர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட இடத்திலே உட்கார வைத்திருக்கிறது. இதே பல்கலைக்கழகததிலே தமிழுக்கு இடம் இல்லை என்று பேராசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.
சமற்கிருதம் படித்தால் தான் சமற்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவப்படிப்புப் படிக்க முடியும் என்று ஒரு காலம் இருந்தது.  தமிழ் தெரிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. எவ்வளவு பெரிய மாற்றங்கள் வந்திருக்கிறதென்றால், ஆச்சரியம். ஆனால், இப்பொழுதும் அதைத் தமிழன் உணராமல் இருக்கிறானே, அது அதைவிடக் கொடுமை (கைதட்டல்). வந்த மாற்றங்கள் பல. சமூகநீதிக் கொள்கை ஒன்றை எடுத்துக் கொண்டால், சர்.பிட்டி.தியாக ராயரிலிருந்து தொடங்கி, டி.எம்.நாயர் வாதாடி, டாக்டர் நடேசனார் ஆதரித்து, அன்றைக்கு இருந்த சட்டமன்றத்திலே அதற்காகவே பல கேள்விகளைப் பல தலைவர்கள் கேட்டுத் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.
முத்தையா முதலியார், ‘கம்யூனல் ஜீ.ஓ’வை முதன் முதலாக வெளியிட்டு அப்புறமும் அதற்கு எவ்வளவோ குறைபாடுகள் ஏற்பட்டன. கம்யூனல் ஜீ.ஓ. பெருமை பெரியாரையே சாரும். 1951இல் அரசியல் சாசனப்படி நீக்கி வைக்கப்பட்டு, கம்யூனல் ஜி.ஓ.செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு பெரியார் போராடி, அண்ணா போராடி அன்றைக்கு காமராஜர் முதலமைச்சராக இருந்தார். பிரதமர் நேரு அவர்களைப் பார்த்து கம்யூனல் ஜி.ஓவைப் பற்றி எடுத்துச்சொல்லி, அதன் பின்னர் அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்களையே சாரும்.
ஒரு பெரிய மரத்தை ரம்பத்தால் அறுக்கும் பொழுது விரல் சிக்கிக் கொண்டால் எப்படியோ, அப்படி அந்த கம்யூனல் ஜி.ஓவை பெரியார் மீட்டெடுத்தார். திராவிடர் இயக்கத்தினர் நடத்திய போராட்டம்; அதற்கு ஆதரவாக சில காங்கிரஸ் தலைவர்கள் இருந்தார்கள் என்பது  உண்மை. இன்றைக்கு அந்த இடஒதுக்கீட்டினால் எல்லா இடங்களிலும் இடஒதுக்கீடு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், எல்லோரும் எல்லா இடத்திலும் இருக்கக் கூடிய ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறதே இது என்ன சாதாரணமா?
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அன்றிருந்த நிலை
நான், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அங்கு இருந்த பார்ப்பனரல்லாத மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் நூறு பேர் தான். 300 பேர் பிராமண மாணவர்கள் இருந்தால், 100 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள் இருந்தனர். இன்றைக்கு எத்தனை ஆயிரம் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, சென்னைப் பல்கலைக் கழகத்திலே படிக்கிறார்கள், நம்மவர்கள். பல்கலைக் கழகங்களே அதிகமாகியிருக்கின்றன. பிராமண ஆதிக்கம் எண்ணங்களில் இன்னும் மாறுபடவில்லை. நம்முடைய எண்ணங்களிலும் இருக்கிறது. நம்முடைய மனப்பான்மையிலும் இருக்கிறது.
திராவிடனாக நம்மை உயர்த்தினார்
ஆகவே, பெரியார் அவர்கள் தமிழனைக் கண்டுபிடித்தார். அவனைத் திராவிடனாக உயர்த்தினார். சமூக நீதியை நிலைநாட்டினார். அரசியலிலே பெரிய மாற்றம் வருவதற்குப் பெரிய அடிப்படையை வகுத்துக் கொடுத்தார். அவர் ஆளுங்கட்சியாக இருந்தாலும், அவர் ஆதரிப்பது அவருடைய ஒரே நோக்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பார்ப்பனரல்லாதார் சமுதாயத்திற்கு நன்மை செய்வது (கைதட்டல்). பார்ப்பனருடைய ஆதிக்கத்தை ஒழிப்பது, குலக்கல்வித்திட்டத்தைத் தடுப்பதற்குத்தான் காமராஜரை ஆதரித்தார் பெரியார். காமராஜரை ஆதரித்தார்; அண்ணாவை எதிர்த்தார். திமுக-வை எதிர்த்தார். ஆனால், அவரைப் பொறுத்தவரையில் அவர் எண்ணுவதே அவருடைய இனநல எண்ணத்திற்காக
யார் சொன்னாலும் சரி
அன்பழகன் சொன்னாலும் சரி, கருணாநிதி சொன்னாலும் சரி, எது நியாயம் என்று அவருக்குப் படுகிறதோ அதைத்தான் செய்வார். தன்னைச் சார்ந்த மக்களுக்கு, தமிழனுக்கு, தாழ்த்தப்பட்டவனுக்கு, ஒடுக்கப்பட்டவனுக்கு எந்த ஆட்சி இருந்தால் நன்மையோ, அதற்காக அவர்களை ஆதரிப்பார். அவருடைய மனப்பான்மைப்படி எது நியாயமோ, எது உண்மையோ அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவார். அவர் எதைப்பற்றியும் கவலைப் படமாட்டார். அந்த தைரியம் அவருக்கு இருந்தது. யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன கவலை என்று சொல்லவில்லையே தவிர, அந்த மனப்பான்மை அவருக்கு இருந்து.
அண்ணா, நீரோடு போவார்; பெரியார் எதிர்நீச்சல் அடிப்பார்
எதிர் நீச்சலில் இருக்கின்ற ஒருவருக்கு யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால்தான் எதிர்நீச்சல் போட முடியும். அண்ணா வெள்ளத்தோடு போய் கரையேறுகிறார். பெரியார் வெள்ளத்தை எதிர்த்து நீந்தி, முடிந்தால் கரையேறுகிறவர் (கைதட்டல்). ஒவ்வொருவருடைய மனப்பான்மை ஒரு மாதிரி. நான் என்னைப் பொறுத்தவரை பேசினால், நான் எவ்வளவு மாறுபட்டும் பேசுவேன். ஆனால் பழகும் பொழுது என்னால்  மாறுபட்டுப் பழக முடியாது. எனக்கிருக்கின்ற பழக்கம். வேறு சிலர் இருக்கிறார்கள். பழகும் பொழுது தான் மாறுபடுவார்கள். பேசும் பொழுது மாறுபட மாட்டார்கள் ஆக அது உலகத்தின் இயற்கை.
ஒவ்வொருவரின் மனம் ஒவ்வொரு மாதிரி
ஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆக, தந்தை பெரியாரைப் பற்றி நான் முழு அளவுக்கு நியாயம் செய்து பேசிவிட்டதாக நான் கருதவில்லை. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சரியில்லை என்றால் கொஞ்சம் மூச்சு இறைப்பும், இன்னொரு பக்கம் கொஞ்சம் நாள்களுக்கு முன்னாலே பயணம் போய்விட்டு வந்ததினாலே நீர் கோப்பும் இருக்கின்ற காரணத்தினால் நான் வழக்கம்போல் பேசுகிற நிலை இல்லை.
பெரியாருக்கு நான் செலுத்துகின்ற கடமை
தந்தை பெரியாருக்கு நான், செலுத்த வேண்டிய முழுக் கடமையை நான் செலுத்தியதாகக் கருதவில்லை. இருந்தாலும் பெரியாரை நினைத்துப் பார்க்கிற அரிய வாய்ப்பு நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, வாழ்க பெரியார் புகழ் என்று வாழ்ததி,  என்னுடைய உரையை நான் நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு நிதியமைச்சர் க.அன்பழகன் உரையாற்றினார்.
நன்றி : “விடுதலை”